செய்திகள் :

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

post image

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

தாம்பரம் } மதுரவாயல் புறவழிச்சாலை, போரூர் சுங்கச்சாவடி அருகே சாலையில் வேகமாகச் சென்ற கார், முன்னால் சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. தொடர்ந்து அந்த கார் மதுரவாயல் பாலத்தில் இருந்து கீழே இறங்கி வானகரம் அருகே சென்றபோது, அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ, இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் வாகனத்தில் வந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இதைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரும் காரை விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் சென்ற கார் திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து வேலப்பன்சாவடி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாரும், பொதுமக்களும் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய நபர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் காருக்குள் அவரது குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், விபத்தை ஏற்படுத்தியது திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சாய் ஸ்ரீனிவாசன் (35) என்பதும், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையை காரில் அமர வைத்துக் கொண்டு, காரை வேகமாக ஓட்டிச் சென்று சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி இடித்தது தெரியவந்தது.

இதில் வானகரம் முதல் வேலப்பன்சாவடி வரை ஒரு ஆட்டோ, 6 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அர்ஜுன் (33), வானகரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (67) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், அவருடன் வந்த ஜெகதீஷ் என்பவர் காயம் அடைந்த நிலையில், வானகரம் பகுதியிலும், 3 பேர் காயம் அடைந்ததும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அர்ஜுன் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸார் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் மதுரவாயல் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சாய் ஸ்ரீனிவாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ச... மேலும் பார்க்க

மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்க... மேலும் பார்க்க