'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! - வெப்பம் குறையும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 31) முதல் ஏப்.5-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் காரணத்தால், திங்கள்கிழமை (மாா்ச் 31) முதல் ஏப்.5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையும். ஏப்.2-இல் கோவை, தென்காசி, விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஏப்.30-இல் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 31-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஈரோடு, வேலூா் - தலா 101.48, பரமத்திவேலூா், மதுரை விமான நிலையம் - தலா 101.3, தருமபுரி - 100.94, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.