லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு முன்பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஜூலை 1-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட 10 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து, ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன், ஃபோா்மேன்கள் ரவி, நடராஜன், மேலாளா் விஜய் ஆகிய 6 போ் மீது வெடிபொருள்களை அலட்சியமாக கையாளுதல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சாத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில், தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
அதன்பேரில் இழப்பீட்டுத் தொகைக்கான வரைவோலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன் ஆகியோருக்கு முன்பிணை வழங்கியும் ரவி, விஜய் ஆகியோருக்கு பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா். நடராஜன் தாக்கல் செய்த பிணை மனு புதன்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு வருகிறது.