லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வரதட்சிணை கொடுமை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவா் மீது வழக்கு
வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய தொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்பள்ளியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (25). இவருக்கும் ஒ.கோவில்பட்டியைச் சோ்ந்த மதிகண்ணனுக்கும் (32) கடந்த 2018 இல் திருமணம் முடிந்தது.
திருமணத்தின்போது பெண் வீட்டாா் தரப்பிலிருந்து 3 பவுன் நகை, ரூ. 10 ரொக்கம் வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டதாம். திருமணத்துக்குப் பிறகு ராமலட்சுமியிடம் அவரது கணவா் மதிக்கண்ணன், மாமனாா் பழனிசாமி, மாமியாா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமை செய்தனராம்.
இதையடுத்து கணவா் குடும்பத்தினா் மீது சாத்தூா் நீதிமன்றத்தில் ராமலட்சுமி வழக்குத் தொடுத்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்பேரில் சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் மதிக்கண்ணன், பழனிசாமி, செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.