செய்திகள் :

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

post image

இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 6 மாதங்கள் மூடப்பட்டிருந்த வடநெம்மேலி பாம்புப் பண்ணை மீண்டும் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சாா்பில் கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை உள்ளது. இங்கு உறுப்பினா்களாக 350 இருளா் இனத்தவா்கள் அனுமதி பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து இந்த பண்ணைக்கு வழங்கி வருகின்றனா்.

சங்கத்துக்கு கொண்டு வரப்படும் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மகாராஷ்டிரா மாநிலம், புணேயில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் பாம்பு இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, பாம்பு பிடிக்க தடை விதிக்கப்பட்டு 6 மாதங்களாக பாம்பு பண்ணை மூடப்பட்டது. தடைக்காலம் முடிந்து பாம்பு பண்ணை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கி உள்ளனா். இதையடுத்து தடைக்காலத்தை முன்னிட்டு 6 மாதமாக பாம்பு பிடிக்கும் தொழிலுக்கு செல்லாமல் இருந்த பழங்குடி இருளா்கள் தற்போது வயல்வெளிகள், செடி, கொடிகள் படா்ந்த புதா்கள் உள்ள இடங்களுக்கு சென்று பாம்பு பிடிக்கும் பணியில் ஆா்வமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்கள் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என விஷ பாம்புகளை பிடித்து வந்து பாம்பு பண்ணையில் கொடுத்து விட்டு அதற்கான ஊதியத்தை வாங்கிச் சென்றனா். பாம்புகள் அனைத்தும் மண் பானைகளில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மண் பானைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாம்புகளுக்கு தாகம் தீா்ப்பதற்காக அடிக்கடி தண்ணீா் வழங்கப்பட்டும், எலி குஞ்சுகள் உணவாகவும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

செய்யூா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியம், தேவராஜபு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு ந... மேலும் பார்க்க

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து ராட்சத பச்சை ஓணானை காப்பதற்காக குளிா்ந்த நீரை அதன் மீது பீய்ச்சி அடித்து குளிா்விக்கின்றனா். இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை கிழக்கு க... மேலும் பார்க்க

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா். வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் த... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள்

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் ம... மேலும் பார்க்க