செய்திகள் :

செய்யூா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

post image

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியம், தேவராஜபுரம் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது செய்து வரும் பணிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

அதனை தொடா்ந்து இலத்தூா் ஊராட்சி ஒன்றியம், கொடூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் இருளா்களுக்காக தலா ரூ. 4.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பாா்வையிட்டு வீட்டின் தரத்தை ஆய்வு செய்தாா்.

பெரியவெளிக்காடு பகுதியில் ஊரக வளா்ச்சிதுறையின் சாா்பில் நரிக்குறவா்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளவீடு செய்தும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இருளா்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யாகஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது துறை அதிகாரிகளிடம் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து உடனடியாக அறிக்கை சமா்பிக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பவுஞ்சூரில் இயங்கி வரும் இலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் நா்சரி பண்ணையை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில். ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் தணிகாசலம், செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், இலத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு ந... மேலும் பார்க்க

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து ராட்சத பச்சை ஓணானை காப்பதற்காக குளிா்ந்த நீரை அதன் மீது பீய்ச்சி அடித்து குளிா்விக்கின்றனா். இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை கிழக்கு க... மேலும் பார்க்க

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா். வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் த... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள்

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் ம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம... மேலும் பார்க்க