செய்திகள் :

`6 மாதமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள்..!' - அமித் ஷாவிடம் கடைசி நேரம் வரை போராடிய ஷிண்டே

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு வார இழுபறிக்கு பிறகு நாளை புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியில் வந்த உடன் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிகார பகிர்வு பேச்சுவார்த்தை நடந்தது.

இப்பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவங்கள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க தலைவர் சில விபரங்களை தெரிவித்துள்ளார். கடந்த 28-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு, `சட்டமன்ற தேர்தலில் மஹாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றால் தொடர்ந்து என்னை முதல்வராக வைத்திருப்பதாக வாக்குறுதி கொடுத்தீர்களே...' என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க தலைவர்களிடம் நினைவுபடுத்தி இருக்கிறார்.

உடனே பா.ஜ.க பெரும்பான்மை பெரும் அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கும்போது முதல்வர் பதவியை உங்களுக்கு கொடுப்பது சரியாக இருக்காது என்று கூறி முதல்வர் பதவி கொடுக்க முடியாது என்று அமித் ஷா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். அதோடு உங்களது கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்ற பிறகு முதல்வர் பதவியை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுப்பீர்களா என்று அமித் ஷா கேட்டுள்ளார். உடனே அதற்கு ஏக்நாத் ஷிண்டேயால் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. உடனே 6 மாதங்களுக்காவது தன்னை முதல்வர் பதவியில் தொடர அனுமதிக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கெஞ்சி இருக்கிறார்.

ஆனால் அவ்வாறு 6 மாதங்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பது சரியாக முடிவாக இருக்காது என்றும், நிர்வாகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறி பா.ஜ.க தலைவர்கள் அக்கோரிக்கையையும் ஒட்டுமொத்தமாக நிராகத்துவிட்டனர் என்று அத்தலைவர் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியில் வந்ததில் இருந்து முதல்வர் பதவியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே உறுதியாக இருந்தார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் அதற்கு வாய்ப்பு இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து உடனே கிளம்பி சொந்த ஊருக்கு சென்றார் ஏக்நாத் ஷிண்டே. அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதேசமயம் தனது கட்சியினருக்கு அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுப்பதில் இப்போது பிடிவாதம் காட்டி வருகிறார். ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் 6 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் என்ற விகிதத்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பா.ஜ.க 20 முதல் 22 அமைச்சர் பதவியை வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவியும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 அமைச்சர் பதவியும் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. வெற்றி சதவீதம் அதிகமாக இருப்பதால் சிவசேனாவிற்கு கொடுக்கும் அதே அமைச்சர் எண்ணிக்கையை தங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுனில் தட்கரே கூறுகையில்,''எங்களது கட்சி குறைந்த தொகுதியில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில தொகுதிகளை பா.ஜ.கவிற்கு விட்டுக்கொடுத்தோம். சில தொகுதியில் நிர்ப்பந்தம் காரணமாக போட்டியிட்டோம். எனவே அமைச்சரவை குறித்து அமித் ஷாவுடன் அமர்ந்து பேசுவோம்''என்று தெரிவித்தார்.

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* இந்தி கற்பிப்பவர்களை நிர்மலா சீதாராமன் கேலி செய்தார்.* வட இந்திய எம்.பி.க்களை தமிழில் கோஷம் எழுப்ப திருச்சி சிவா சமாளித்தாரா?* டங்ஸ்டன் சுரங்கம்: மக்களவையில் எஸ்.வேலாய... மேலும் பார்க்க

`விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு' - விருதுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

டெல்லியில், கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், FICCI Turf 2024, 14-வது விளையாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருத... மேலும் பார்க்க

Farmers Protest: `விவசாயிகள் பொறுமையை சோதிக்க முயன்றால்...' - மத்திய அரசை எச்சரிக்கும் துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த... மேலும் பார்க்க