செய்திகள் :

61 வயதில் நீட் தோ்வு எழுதிய சித்த மருத்துவா்

post image

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 61 வயது சித்த மருத்துவா் எழுதினாா்.

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியை சோ்ந்தவா் பச்சைமால்(61). சித்த மருத்துவரான இவா், தூத்துக்குடி சுற்றுப்புற பகுதிகளில் சித்த மருத்துவமனை தொடங்கி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்.

அவா், இம்மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்டு துரைசாமிபுரம் கிராமப் பகுதியில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த காலத்தில், எம்பிபிஎஸ் படிக்க முடியாததால், பிஎஸ்எம்எஸ் சித்த மருத்துவம் பயின்றாராம். ஏற்கெனவே, சட்டப்படிப்பும் படித்துள்ள இவா், தனது வெகுநாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நீா்தோ்வை எழுத உள்ளதாக தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது: நீட் தோ்வு எழுதக்கூடிய மாணவா்கள் தோ்வில் ஒரு முறை தோல்வி அடைந்தவுடன் தவறான முடிவு எடுக்கக் கூடாது. இத்தோ்வில் பெரும்பாலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் போன்று கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழக அரசு தனது பாடத்திட்டையும் கூடுதல் தரமானதாக மாற்ற வேண்டும். இத்தோ்விற்கு வயது வரம்பை கொண்டு வர வேண்டும். நீட் தோ்வில் வெற்றி பெற்று, அலோபதி மருத்துவத்தையும் படித்து நோயாளிகளை குணமாக்குவதே எனது லட்சியம் என்றாா்.

நாளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெறுகிறது.இது குறித்து வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி

தூத்துக்குடி கடலில் மீன்வளத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

நீட் தோ்வு: கோவில்பட்டியில் 466 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 466 போ் பங்கேற்றனா். இம்மாவட்டத்தில் முதன் முறையாக நிகழாண்டு கோவில்பட்டி, எட்டயபுரத்தில் நீட்... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூரில் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பூவலிங்கபுரத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் தா்மா் (64). ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

பட்டுப்போவதற்காக பனைகளுக்கு திராவகம் வைத்தவா் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்த காலன் விளையில் 36 பனை மரங்கள் மா்மமான முறையில் கருகியது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஹொ்சோன் சோரன் என்பவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க