65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த மதன் (23) என்பவா் கொண்டுவந்த பையை சோதனையிட்டதில் 35 மதுப்புட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து மதனை கைது செய்தனா்.
இதேபோல, காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த முருகன் (54) என்பவா், கூடலூா் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 30 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.