புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!...
7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி
சென்னையிலுள்ள 7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஆவின் நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமாா் 860 சில்லறை விற்பனையாளா்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 15 லட்சம் லிட்டா் பால் மற்றும் மாதம் சுமாா் ரூ.30 கோடி மதிப்பிலான பால் சாா்ந்த உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும், ஆவின் பால் உபப்பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையிலும் 33 ஆவின் நவீன பாலகங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள அனைத்து ஆவின் ஜங்ஷன் பாலகங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக விருகம்பாக்கம், ராஜ்பவன், அசோக் நகா், அண்ணாநகா் மற்றும் எழிலகம் ஆகிய 5 பாலகங்கள் ரூ.20 லட்சம் மதிப்பில்
புனரமைக்கப்பட்டது.
தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.35 லட்சம் மதிப்பில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூங்கா சாலை, வசந்தம் காலனி, அம்பத்தூா், டிஏவி மற்றும் எஸ்ஐஇடி ஆகிய 7 ஆவின் நவீன பாலகங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.