செய்திகள் :

`75 வயதில் ஓய்வா? நான் அப்படி கூறவில்லையே! பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ - RSS தலைவர் மோகன் பகவத்

post image

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் டெல்லியின் விக்யான் பவனில் நடந்த 'ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு சொற்பொழிவு' நிகழ்வில் உரையாற்றினார்.

அப்போது, ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பில் அவ்வப்போது சிரமங்கள் இருந்தாலும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்போக்கும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் அரசுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறதே தவிர ஒருபோதும் அரசு விவகாரங்களில் தலையிடுவதில்லை.

Mohan Bhagwat
Mohan Bhagwat

ஒருபோதும் கூறவில்லை

நம் ஆலோசனை ஏற்று முடிவெடுப்பதும் தவிர்ப்பதும் அரசின் தனிப்பட்ட உரிமை. நாட்டை நிர்வகிப்பதில் அவர்கள்தான் நிபுணர்கள்.

75 வயதில் நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது ஒருவர் ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.

சங்கத்தில், எங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது, எங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை செய்ய வேண்டும்.

எனக்கு 80 வயது ஆனாலும், ஒரு ஷாகாவை நடத்த சங்கத்தால் கூறப்பட்டால், நான் அதைச் செய்ய வேண்டியிருக்கும். சங்கம் சொல்வதை நாங்கள் செய்வோம். இஸ்லாம் இருக்கக்கூடாது என்று எந்த இந்துவும் நினைப்பதில்லை.

மதத்தின் அடிப்படையில் யாரையும் தாக்குவதில் ஆர்.எஸ்.எஸ்-க்கு நம்பிக்கை இல்லை. சாதி அமைப்பு காலாவதியானது, அது அகற்றப்பட வேண்டும்.

மேலும், சட்டவிரோத குடியேற்றம் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதைத் தடுக்க அரசுடன் சேர்ந்து சமூகமும் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...'- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜ... மேலும் பார்க்க

"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்றும், அது தொடர்பான அணுகுண்டை வீசப்போகிறேன் என்றும் முன்பு தெரிவி... மேலும் பார்க்க

TNPSC: "அய்யா வைகுண்டர் பற்றிய கேள்வியே தவறானது; இதயத்தை நொறுக்கும் செயல்" - அய்யா வழியினர் வேதனை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதில், பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வுசெய்க என கேட்கப்பட்ட கேள்... மேலும் பார்க்க

டீ, காபி விலை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வரை - செப்டம்பரில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று முதல் (செப்டம்பர், 2025) இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு சில நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.1. வருமான வரிக் கணக்குத் தாக்கல்: வருகிற 15-ம் தேதியோடு, வருமான வரிக் கணக்கு... மேலும் பார்க்க

7.8% வளர்ந்த இந்தியாவின் GDP; இது தொடருமா? - இப்போதாவது மத்திய அரசு GST-ஐ குறைக்கிறதே! | Explained

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2025-26 நிதியாண்டில், முதல் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.8 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

"விஜய்யுடன் கூட்டணியா... எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓ.பி.எஸ்

'அதிமுக'வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகல... மேலும் பார்க்க