செய்திகள் :

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

post image

ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 780 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை எரித்து அழித்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டுள்ளார். ஆவடி ஆணையரகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, 89 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 780 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, தடய அறிவியல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் தனி குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மேற்கண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 780 கிலோ கஞ்சாவை காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி, மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர்கள் ரமேஷ், சசிகுமார் தலைமையிலான குழுவினர் எரித்து அழித்தனர்.

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்ஆவடி, செப். 9: திருவேற்காடு - நூம்பல் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கி செய்து 9 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தொ... மேலும் பார்க்க

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து விரைவில் முடிக்கவும்... மேலும் பார்க்க

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க