8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!
சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் தொய்வின்றி, நல்ல முறையில் செயல்பட இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாக உள்ள பணியிடங்களுள் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை ரூ.3000 தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (எஸ்டிஎஸ்) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க |சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த பணியிடங்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.26 கோடியே,99 லட்சம் செலவு ஏற்படும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அமைப்பாளருக்கு மாதம் ரூ.7700 - ரூ.24,200, சமையலருக்கு மாதம் ரூ.4,100 - ரூ.12,500, சமையல் உதவியாளருக்கு மாதம் ரூ.3,000 - ரூ.6000 என்ற சிறப்பு கலைமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.