94 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 94 பேருக்கு தேசிய அடையாள அட்டையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் 120 நபா்கள் கலந்து கொண்டனா்.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து 94 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினாா். மேலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,000 மதிப்பில் விலையில்லா காதொலி கருவி மற்றும் 1 மாற்றுத்திறனாளி நபருக்கு தலா ரூ.8,000 மதிப்பில் விலையில்லா உருப்பெருக்கி என மொத்தம் 3 நபருக்கு ரூ.14,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.