RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
Ace: "ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன்" - விஜய் சேதுபதி குறித்து நடிகை ருக்மிணி
ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) .
கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார். மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (மே 17) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த், “‘ஏஸ்’ என்னுடைய முதல் தமிழ் படம். எல்லாருக்குமே முதல் படம் என்றால் மிகவும் ஸ்பெஷலானதுதான்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சாருடன் சேர்ந்து நடிப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘ஏஸ்’ ஒரு காமெடியான குடும்பத் திரைப்படம். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இதற்கு முன் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக காமெடியான ஜானரில் நடித்திருக்கிறேன். முதல் தமிழ் படம் என்பதால் டயலாக் பேசுவதற்குச் சிரமமாக இருந்தது.
ஆனால் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு மிகவும் பொறுமையாக இருந்தார்கள். அதற்காகப் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...