செய்திகள் :

ADMK: "இக்கட்டான சூழலில் இருக்கிறேன்; நான் என்ன பேசினாலும்..." - செங்கோட்டையன் சொல்வது என்ன?

post image

அடுத்தடுத்த சர்ச்சைகளுக்குப் பிறகு, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

அந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன், "இக்கட்டான சூழலில் உங்களுடன் உரையாற்றுகிறேன். காலத்தின் சூழலால் தொலைக்காட்சியில் நாள்தோறும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

நான் இப்போது எவ்வளவு இக்கட்டான சூழலில் பேசுகிறேன் என்பதை உங்களால் உணர முடியும். நாம் தமிழர் கட்சி சீமான் பேசுவதுபோல என்னால் பேச முடியாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால், அவர் நினைப்பதைப் பேசலாம். ஆனால், நான் அளந்து பேச வேண்டியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டாலும், அது எப்படி வரும் என்பதை நான் அறிவேன்.

'சபாநாயகர் சந்திப்பு...' - செங்கோட்டையன்

ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு. 'நீங்கள் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள்... அப்புறம் எப்படி அவரைச் சந்தித்தீர்கள்' என்று என்னிடம் கேட்டார்கள். நான் மட்டுமல்ல... அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் சென்றோம். என்னுடைய தேவை தொகுதி மக்களின் நலன். பவானி ஆற்றின் அருகில் சாயப் பட்டறை கொண்டு வர இருக்கிறார்கள் என்று என்னைச் சிலர் சந்தித்தார்கள். அந்த மனுவைத்தான் நான் சட்டப்பேரவை தலைவரிடம் கொண்டுசென்றேன். ஆனால், அது 'சபாநாயகரை செங்கோட்டையன் எப்படிச் சந்தித்தார்?' என்று இப்போது பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரைச் சந்திப்பது இயல்பான ஒன்று. கவன ஈர்ப்பு தீர்மானம் போன்றவற்றைக் கொண்டுவர அவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அது எல்லாம் பெரிய விஷயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

புரட்சித் தலைவரால் என்னுடைய பயணத்தில் காலடி எடுத்து வைத்தேன். அவருடைய திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்ற புரட்சியைத் திரைப்படங்கள் மூலம் அவர் ஏற்படுத்தினார். அவர் சாதரணமாக அரசியல் வரலாற்றில் இடம்பெறவில்லை. அவரது அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, எல்லோரையும் ஈர்ப்பது போல இருக்கும்.

2026-ம் ஆண்டு நெருங்கும் நேரம் இது. இந்த நேரத்தில்தான் நான் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எப்படிப் பதில் சொன்னாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். நான் தடுமாறாமல் பதில் சொல்ல வேண்டும். சீமானைப் போல அள்ளிவிட முடியாது. அவர் உணர்ச்சிகரமாகப் பேசினாலும் இளைஞர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நான் நிதானத்துடன் பேசும் சூழலில் உள்ளேன்.

'புரட்சி தலைவருக்கு பின், புரட்சி தலைவி...' - செங்கோட்டையன்

'ஒன்றே எங்கள் சாதியே; ஒன்றே எங்கள் நீதியே. உழைக்கும் மக்கள் யாவரும் ஒரு தாய் பெற்ற பிள்ளையே' என்று அன்றே புரட்சித்தலைவர் கூறினார். இந்த மாதிரியான கருத்துகளைக் கேட்டுதான், அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தொண்டனாகச் சேர்ந்தோம். இன்றைக்கும் நான் தொண்டனாக இருக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். நான் தலைவர் இல்லை.

மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்த புரட்சித்தலைவர் மறைந்தபோது, 'இனி என்ன செய்யப்போகிறோம்' என்று தவித்துக்கொண்டிருந்தபோது துணிவோடு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அவரது ஆற்றலாலும், தொலைநோக்கு பார்வையாலும் நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

மத்திய ஆசியாவில் சிறந்த பிரதமர் பாரத பிரதமர் என்பதைச் செய்தியில் பார்த்தேன். இந்திய எல்லைக்கோட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் அவர். இலவச தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டது. வருமான வரி விலக்கு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது நான் யாரையும் கடுமையாகப் பேசியதில்லை. ஏன் கடுமையாகப் பேசவில்லை என்று கேட்டால், அப்படிப் பேசத் தான் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எந்தப் பாதை சரியானதோ, அந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. என் வெற்றி முடிவானது.

பாரதி சொன்னது மாதிரி பல வேடிக்கை மனிதர்கள் போல மட்டும் வீழ்ந்துவிட்ட மாட்டேன்" என்று பேசியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு' - பின்னணி என்ன?

'காசா போரை நிறுத்த வேண்டும்...','உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்'... - இப்படி உலகில் எந்தெந்த நாடுகளில் போர்கள், தாக்குதல்கள் நடந்து வருகிறதோ, அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தும், அந்த நாடுகளின் மீது... மேலும் பார்க்க

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்..." - என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நாக்பூரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.அப்போது அவர், "டாக்டர் அப்துல் கலாம் அணு விஞ்... மேலும் பார்க்க

Railway Exam: "தமிழக தேர்வர்களுக்கு 1,500 கிமீக்கு அப்பால் தேர்வு மையம்" - சு.வெங்கடேசன் கண்டனம்

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Vijay : 'விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்' - விஜய் காட்டம்

தமிழகத்தின் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார். அதில்,வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓ... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: "விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து" -அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை தையூரில் உள்ள ஐ.ஐ.டிக்கு நேற்று வந்திருந்தார். அங்கே ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப்... மேலும் பார்க்க

``நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?" - கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவன் கல்யாண் விளக்கம்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றம் முதல் அரசியல் கட்சிகளின் மேடை வரை பா.ஜ.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஆந்திராவில் ஆளு... மேலும் பார்க்க