செய்திகள் :

Agaram விதை 15-ம் ஆண்டு: "சூர்யா செய்வது மிகப்பெரிய மனிதாபிமான சேவை" - வீரமுத்துவேல் புகழாரம்

post image

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

சூர்யா
சூர்யா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், "இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. அகரம் நிறுவனர் சூர்யா செய்து கொண்டிருப்பது சிறந்த மனிதாபிமான சேவை.

99 சதவிகிதம் பேர் தனக்காக மற்றும் தனது குடும்பத்துக்காகவும் மட்டும் செய்து கொண்டிருக்கும்போது, நீங்கள் சமுதாயத்துக்காக இந்த முயற்சியை செய்திருப்பது மிகப்பெரிய சேவை. இது மிகப்பெரிய வேலை.

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

ஒவ்வொருவரும் உங்களின் கரியரில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லும் காலம் வரும்.

ஆனால், அதை இந்த சமூகத்திற்கும், அகரம் பவுண்டேஷனுக்கும் திருப்பிக் கொடுக்க மறக்காதீர்கள்." என்று கூறினார்.

அவர் பேசியதை தொடர்ந்து அவரின் கரங்களால் சாய்ராம் கல்லூரி நிறுவனம் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது.

``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர் படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. குஜராத் மாநில காவல்துறை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சோலா, சந... மேலும் பார்க்க

Agaram: "21 வயதில் நானும் ஆசைப்பட்டேன்; அதேபோல சூர்யாவும்..." - கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

Agaram: "உலகத்துல சவாலானது நல்லது செய்றது; யாருக்காக வேண்டும் என்பதில் சூர்யா... " - சு.வெங்கடேசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிர... மேலும் பார்க்க

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால... மேலும் பார்க்க

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன... மேலும் பார்க்க