Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது...
"இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டாம். உலகத்திலேயே அருமையான விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் நம்மிடம் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பாராட்ட வேண்டும்.

அவர்கள்தான் சிவில் விமானப் போக்குவரத்தின் முதுகெலும்பு.
மேலும், அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் முதன்மை வளமாகும். அதனால், நாம் இந்தக் கட்டத்திலேயே எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.
இன்னும் இதில் நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளது. அதனால், இப்போதே அதுகுறித்து பேசுவது முன்கூட்டியே பேசுவது போன்று ஆகிவிடும். அதனால், முழு தகவல்களும் வரட்டும்". என்றிருக்கிறார்,
வெளியாகி உள்ள அறிக்கையில், இன்ஜினுக்கு செல்லும் எரிவாயு நின்றதே விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய விமானிகள் முயற்சித்திருக்கிறார்கள் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.