செய்திகள் :

Ajith: ``அடைந்தால் நல்ல விஷயம்; வெற்றி அடையாவிட்டாலும்... " - ரசிகர்கள் குறித்து அஜித்

post image
துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். அந்தப் போட்டியில் அஜித்தின் ரேஸிங் அணி 3வது இடத்தைப் பிடித்திருந்தது. பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அஜித் தற்போது போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார். அங்கு நடைபெற்று வரும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரின்ட் கார் ரேஸிங் தொடரில் கலந்துகொண்டுள்ளார்.

Ajith Kumar
Ajith Kumar

இந்தத் தொடரின் முதல் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 4.653 கி.மீ அளவிலான பந்தய தூரத்தை, 1.49.13 லேப் டைமிங்கில் அஜித் நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "நிறைய ரசிகர்கள் ரேஸைப் பார்க்க நேரில் வந்திருந்தார்கள்.

நான் சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும்,ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை பாருங்கள். நன்றாக படியுங்கள். கடுமையாக உழையுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தை பண்ணுங்க.

Ajith Kumar
Ajith Kumar

நமக்கு பிடித்த விஷயத்தில் கலந்துகொள்ளும்போது வெற்றி அடைந்தால் நல்ல விஷயம். வெற்றி அடையாவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். 'LOVE YOU ALL' என்று பேசியிருக்கிறார்.

புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!

சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். 'பறந்து போ' என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். Rotterdam film festivalலில் திரையிட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

Sardaar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் - அடுத்த பட அறிவிப்பு

'மெய்யழகன்' படத்திற்குப் பின் கார்த்தியின் கிராப் எதிர்பார்ப்பிற்குள்ளாகி விட்டது. 'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியார்', 'சர்தார்' பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்த... மேலும் பார்க்க

Bigg Boss Rayan: `எனக்கான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகணும்னு நினைக்கிறேன்' - பட விழாவில் ரயான்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிட்டது.பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார் `டாஸ்க் பீஸ்ட்' ரயான். `ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியிருக்... மேலும் பார்க்க

Director Bala: ``வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' - இயக்குநர் பாலா

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வணங்கான்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண்... மேலும் பார்க்க