செய்திகள் :

Anirudh: "வி.டியின் அந்த மனசு..., கிங்டம் ஒரு மைல்கல்!" - இசை வெளியீட்டு விழாவில் அனிருத்!

post image

விஜய் தேவரகொண்டா, பாக்கியஶ்ரீ போஸ் நடித்துள்ள திரைப்படம் கிங்டம். கௌதம் தின்னனுரி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

என்ன பேசினார் Anirudh?

நேற்று (28.07.2025) இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய அனிருத், "தெலுங்கு சினிமாவில் என்னுடைய வழிகாட்டி நாக வம்சி.

Kingdom Audio Launch
Kingdom Audio Launch

என்னுடைய பாடல்கள் ஆந்திராவில் வெளியாகி வெற்றிபெறும்போது அதற்காக பெரிதும் மகிழ்வது அவர்தான். இப்போது வரை எங்களது பல படங்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த சிறப்பான கிங்கம் படத்துக்காக வம்சிக்கும் ஒட்டுமொத்த சித்தாரா குழுவுக்கும் நன்றி.

கௌதம் தின்னனுரி என்னுடைய சகோதரர். இங்கே நிறைய ஜெர்சி பட ரசிகர்கள் இருக்கிறீர்களா... இந்த கிங்டம் படம் கௌதமுக்கு அடுத்த மிகப் பெரிய படியாக இருக்கும். படம் சிறப்பாக வந்திருக்கிறது.

படத்தில் பாக்கியஶ்ரீ சிறப்பாக நடித்திருக்கிறார். சத்யதேவும் வெங்கடேஷும் முக்கிய ரோலில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் எடிட்டர் நவின் நூலி இப்போது நாட்டின் முக்கிய எடிட்டர்களில் ஒருவர்." எனப் பேசினார்.

தெலுங்கு சினிமால் ஃப்ரஷ்ஷாக ஒன்றை செய்திருக்கிறோம்...

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

மேலும் விஜய் தேவரகொண்டா குறித்து, "ரௌடிபாய் வி.டி குறித்து நான் ஒன்று சொல்ல வேண்டும். இப்போது ஸ்டூடியோவில் வேலைகள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஹீரோக்கள் கால் செய்தால் இது தயாராகிவிட்டதா, அது தயாராகிவிட்டதா எனக் கேட்பார்கள். ஆனால் 5 நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு பெரிய மெஸ்ஸேஜ் அனுப்பினார். அதில் "நீங்கள் நன்றாக தூங்குகிறீர்கள், ரெஸ்ட் எடுக்கிறீர்கள் என நம்புகிறேன்... அதுதான் முக்கியம்" என எழுதியிருந்தார். அதுதான் அவரது மனசு. அவர் அருமையான மனிதர். எங்களுடன் இருப்பதற்காக சென்னை வந்தார்.

நான் ஒரு படத்தை பார்த்துவிட்டு அது பிடிக்கவில்லை என்றால் இப்படி சொல்ல மாட்டேன். நான் படத்தை பார்த்துவிட்டேன். இது வி.டியின் கரியரிலும் எனது கரியரிலும், கௌதம் மற்றும் வம்சியின் கரியரிலும் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கப்போகிறது.

கிங்டம் ட்ரைலர் வெற்றியடைந்திருக்கிறது எனக் கேள்விபட்டேன். ஓப்பனிங் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறோம். நாங்கள் தெலுங்கு சினிமாவில் புதிதாக ஒன்றை செய்ய முயற்சி செய்திருக்கிறோம். நிச்சயம் வொர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன்." என்றார்.

அத்துடன், "என் முதல் ஆல்பம் 3 ரிலீஸ் ஆகி 12,13 ஆண்டுகள் ஆகப்போகிறது. அப்போதுமுதல் தெலுங்கு மாநிலங்களிலிருந்து எங்களுக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. நான் தெலுங்கு குடும்பம் என்கிற அளவுக்கு, நீங்கள் என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்." என்றும் பேசினார்.

Kingdom: ``அனிருத்தை கடத்தி கொண்டு போகணும்; சூர்யா சாருக்கு நன்றி!" - சென்னையில் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்காக ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் பறந்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, 'ஜெர்ச... மேலும் பார்க்க

`மூர்க்கமான கண்களுடையவர்; ஆனால்..!' - மலையாள நடிகரைப் புகழ்ந்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா

'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார... மேலும் பார்க்க

Rashmika Mandanna:``உங்களைப் போல நடிக்க வேண்டும் விஜய் தேவரகொண்டா"- புகழ் மாலை சூட்டிய ரஷ்மிகா

'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார... மேலும் பார்க்க

Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ஓபன் டாக்

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

Rashmika: 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை தொடங்கிய நடிகை; விலை என்ன தெரியுமா?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது முதல் தொழில்முனைவு முயற்சியாக 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட், அவரது தனிப்பட்ட நினை... மேலும் பார்க்க