அரிதான தோல் புற்றுநோய்: மண்டை ஓடு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மறுவாழ்வு
Anurag Kashyap: "திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும்!" - அனுராக் காஷ்யப் காட்டம்!
மும்பையில் உள்ள 'KWAN' கலெக்டிவ் நிறுவனம் மற்றும், கலெக்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நெட்வர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சுப்பிரமணியம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்துள்ள "சிரஞ்சீவி ஹனுமான் – The Eternal" திரைப்படம், சினிமா துறையில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியை பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மாலோஹத்ராவுடன் இணைந்து மேற்கொண்ட விஜய் சுப்பிரமணியத்தை, இயக்குநர் அனுராக் காஷ்யப் கண்டித்திருக்கிறார்.
இது தொடர்பாக அனுராக் காஷ்யப், “இந்த AI திரைப்படம் ஹிந்தி சினிமாவில் எதிர்காலத்தில் ஆபத்தை உருவாக்கும். திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும்.
இப்படிப்பட்ட AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றுவதற்க்கு வழிவகுக்கும்.
இதை எதிற்கும் வகையில், விஜய் சுப்பிரமணியத்தின் ஏஜென்சியை விட்டு நடிகர்கள் வெளியேற வேண்டும்” என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “இத்தகைய நிறுவனங்கள் கலைஞர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இயங்குவதுவில்லை.
கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அனைவரையும் பொறுப்புள்ளவர்களாக பாதுகாக்க வேண்டியது இந்த ஏஜென்சிகள்தான்.
ஆனால் அவர்களின் இலக்கு முழுவதும் பணத்தின் மீதுதான் இருக்கிறது. AI டெக்னாலஜி மூலம் சினிமா உலகம் ஆபத்தான பாதையில் சென்றுவிடும்.” என எச்சரித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...