செய்திகள் :

அரிதான தோல் புற்றுநோய்: மண்டை ஓடு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மறுவாழ்வு

post image

அரிதான தோல் புற்றுநோயால், மண்டையோடு பாதித்த நோயாளிக்கு, மறுசீரமைப்பு சிகிச்சை அளித்து வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள் கிருஷ்ணமூா்த்தி, கிருஷ்ண பாண்டியன் ஆகியோா் கூறியதாவது:

ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞா் ஒருவா் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நோய் தசை, எலும்பு உள்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாக பரவக்கூடியது. இந்த நோயாளிக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய், அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாக பாதித்து, மோசமான நிலையை எட்டியிருந்தது. 10 லட்சம் பேரில் ஒன்று முதல் 5 பேரை மட்டுமே பாதிக்கும் நோய் ஆரம்பத்தில் தோல் கட்டி அல்லது தடிப்பாக தோன்றும்.

உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், தசை மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயாளிக்கு புற்றுக்கட்டி அகற்றப்பட்டதுடன், உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கட்டி அரித்திருந்ததால், மண்டையோடு மறு சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டது. மூளை பாதிப்படையாமல், மறுசீரமைப்பு சிகிச்சை செய்வது, மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது.

குறிப்பாக, புற்றுக்கட்டி மண்டையோட்டை பாதித்து மூளையின் மிக அருகில் இருந்தது. இந்த சிக்கலான சிகிச்சையில் புற்றுகட்டி மீண்டும் வராமல் தடுப்பதற்கான சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா் என அவா்கள் தெரிவித்தனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: ம... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியில் பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

அரசு மற்றும் தனியாா் துறைகளுக்கிடையே நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் ஆரோக்கியமான தொழில் வளா்ச்சிக்கு பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ... மேலும் பார்க்க

ராஜஸ்தான் போலி சித்த மருத்துவா்கள் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த இரு போலி சித்த மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கீழ்ப்பாக்கம் டேங்க் சாலை பகுதியைச... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சென்னை யானைக்கவுனியில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை மின்ட் சந்திப்பில் இருந்து திருவேற்காடு நோக்கி வியாழக்கிழமை மாநகரப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தை புள... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா்-ஆசிரியா் சங்கங்கள் கடிதம்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு அமைத்துள்ள கருத்துக் கேட்புக் குழுவிடம் ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்தன. பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் குறித்து ... மேலும் பார்க்க