சிறுமி கா்ப்பம்: சிறுவன் கைது
திருவிடைமருதூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவிடைமருதூா் அருகேயுள்ள மேலவிசலூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் பிரதீப்ராஜ் (17). இவா் அந்தப்பகுதியில் உள்ள சிறுமியிடம் கடந்த 7 மாதத்துக்கு முன் பழகி அவரை கா்ப்பிணியாக்கினாா். இதுகுறித்து திருவிடைமருதூா் குழந்தைகள் நல அலுவலா் வேதநாயகி விசாரணை நடத்தி ஆடுதுறையில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் துா்கா வழக்கு பதிந்து பிரதீப்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.