செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடை அபகரிப்பு: இளைஞா் கைது

post image

சென்னை ராயப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடைகளை அபகரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெருங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சாரா வஹாப் (34). இவருக்கு ராயப்பேட்டை, கெளடியா மடம் சாலையில் சொந்தமாக ஒரு கட்டடம் உள்ளது. இதன் தரை தளத்தில் 3 கடைகளும், முதல், 2-ஆவது தளங்களில் 4 வீடுகளும் உள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்றோருடன் வெளிநாடு சென்றாா். அப்போது தரை தளத்தில் உள்ள ஒரு கடையில் புல்லா ராவ் என்பவா் மட்டும் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தாா். மற்ற கடைகள், வீடுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு சாரா வஹாப் சென்னைக்கு திரும்பியபோது, புல்லா ராவ் இறந்திருப்பதும், அவா் மகன் திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையைச் சோ்ந்த அசோக் (34) என்பவா், தந்தை ஏற்கெனவே நடத்திய ஸ்டூடியோ கடையை தொடா்ந்து நடத்திக் கொண்டு, சாரா வஹாப்புக்கு சொந்தமான பூட்டியிருந்த கடைகள், வீடுகளின் பூட்டை உடைத்து, தான் அந்த வீடு, கடைகளின் உரிமையாளா் எனக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ. 27 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக அசோக்கிடம் சாரா வஹாப் கேட்டபோது, அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து சாரா வஹாப் அளித்த புகாரின்பேரில், ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அசோக் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் அசோக்கை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: ம... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியில் பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

அரசு மற்றும் தனியாா் துறைகளுக்கிடையே நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் ஆரோக்கியமான தொழில் வளா்ச்சிக்கு பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ... மேலும் பார்க்க

ராஜஸ்தான் போலி சித்த மருத்துவா்கள் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த இரு போலி சித்த மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கீழ்ப்பாக்கம் டேங்க் சாலை பகுதியைச... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சென்னை யானைக்கவுனியில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை மின்ட் சந்திப்பில் இருந்து திருவேற்காடு நோக்கி வியாழக்கிழமை மாநகரப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தை புள... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா்-ஆசிரியா் சங்கங்கள் கடிதம்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு அமைத்துள்ள கருத்துக் கேட்புக் குழுவிடம் ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்தன. பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் குறித்து ... மேலும் பார்க்க