Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?
Apollo: பரம்பரை புற்றுநோய்; விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் அப்போலோ கேன்சர் சென்டர்
புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முதன்மை வலையமைப்பாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), பரம்பரை புற்றுநோய் விழிப்புணர்வு வார அனுசரிப்பின்போது, மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.
மரபணு சோதனை மற்றும் தன்முனைப்புடன் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே இத்தகைய புற்றுநோயைக் கண்டறிவதை வலியுறுத்துவது மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பரம்பரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுள்ள குடும்பங்களுக்கு இது குறித்த அறிவை வழங்குவதும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்கான திறனை வழங்குவதும் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கமாகும்.
உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவது இந்த பரப்புரை திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

பரம்பரை புற்றுநோய்கள், பெற்றோர்களிடமிருந்து அவர்களின் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிற பரம்பரையான மரபணு பிறழ்வுகளினால் உருவாகின்றன. இந்த மரபணு பிறழ்வுகள், புற்றுநோய் ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பை அதிகரிக்கின்றன என்ற போதிலும், அவற்றை உறுதி செய்வதில்லை.
இத்தகைய மரபணு பிறழ்வுகள், நம் உடலில் செல் வளர்ச்சி, பழுதுநீக்கல் மற்றும் புற்றுக்கட்டியை ஒடுக்குவதற்குப் பொறுப்பான மரபணுக்களைச் சீர்குலைக்கின்றன. உலக அளவில் பரம்பரை புற்றுநோய்கள், ஒட்டுமொத்த புற்றுநோய்களில்ஏறக்குறைய 5–10% பங்கினைக் கொண்டிருக்கின்றன (PMC.NCBI).
பெரும்பாலான புற்றுநோய்கள் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது யதேச்சையான பிறழ்வுகளின் காரணமாக ஏற்படுகின்றன. பொதுவான பரம்பரை புற்றுநோய் நோய்த்தொகுப்புகளில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் (HBOC), லிஞ்ச் சிண்ட்ரோம் மற்றும் குடும்ப ரீதியிலான நாளக்கட்டிகள் ஆகியவை உள்ளடங்கும்.
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் (குளோபோகேன் அறிக்கை) மார்பக புற்றுநோய் 1,78,361 நபர்களுக்கும் மற்றும் கருப்பை புற்றுநோய் 45,701 நபர்களுக்கும் கண்டறியப்பட்டது. இவற்றுள் 10%-க்கும் அதிகமானவைBRCA1 மற்றும் BRCA2 மரபணு பிறழ்வுகளுடன் தொடர்புடையவை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தப் பிறழ்வுகளின் விகிதம் 2.9% லிருந்து 28% (IJMIO) வரை மாறுபடுகிறது.
HBOC உடன் தொடர்புடைய பிற மரபணு பிறழ்வுகள் தொடர்ந்து குறைவாகவே அறியப்படுகின்றன. மலக்குடல் புற்றுநோய்களில் 2-3 % ஐ ஏற்படுத்தும் லிஞ்ச் சிண்ட்ரோம் (ScienceDirect), கருப்பை உள்வரிச்சவ்வு, வயிறு, கணையம், கருவகம், சிறுநீர்ப்பாதை மற்றும் இன்னும் பலவற்றில் புற்றுநோய்களுக்கு அதிகரித்த இடர்வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது.
குடும்ப ரீதியான நாளக்கட்டிகள் (FAP) என்பது, ஒரு அரிதான, மரபு வழியான பாதிப்பாகும்; எண்ணற்ற முன்பெருங்குடல் கட்டிகளை இது விளைவிப்பதோடு, 40 வயதிற்குள் மலக்குடல் புற்றுநோய்க்கு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட இடர்வாய்ப்பை இது விளைவிக்கிறது. இது குறித்து இந்தியாவில் மிகக்குறைவான தரவுகளே கிடைக்கப்பெறுகிறது (NCBI).

இந்த பின்னணியில், சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிகிச்சை நிகழ்வை கையாண்டது. இதில் கௌஹாத்தியைச் சேர்ந்த, இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களுக்கு 'லிஞ்ச் சிண்ட்ரோம்' (Lynch syndrome) தொடர்பான புற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாயாரான திருமதி நமிதா டே, 2011-ம் ஆண்டில் தனது 50 -வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றார். அவரது மகள், திருமதி தீபா கோஷ், தனது 26வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012-ல் சிகிச்சை பெற்றார். மிக சமீபத்தில், அவரது மற்ற இரு பிள்ளைகளான திருமதி ஷிகா சர்க்கார் மற்றும் திரு. மதுரா நாத் டே ஆகிய இருவரும் தங்களது 40-வது வயதில் வலது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2024-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரும் தற்போது நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் செய்யப்படும் இடையீட்டு நடவடிக்கையும், அறுவை சிகிச்சை பராமரிப்பும் சிகிச்சை விளைவுகளை சிறப்பானதாக ஆக்குகின்றன; ஒரு சிறந்த, தரமான வாழ்க்கையை வாழ உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த குடும்ப நபர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து பேசிய சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட் P கூறியதாவது, “புற்றுநோய் எப்போதும் தற்செயலாக ஏற்படுவதில்லை என்பதை இந்த நேர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது மற்றும் தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களுக்கு கடத்தப்படக் கூடியது. ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பாதிக்கப்படும்போது, மரபணு காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிகுறியாகும். இதுபோன்ற அதிக இடர்வாய்ப்புள்ள குடும்பங்களில், மரபணு ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கையாக தன்முனைப்புடன் செய்யப்படும் பரிசோதனைகள் விலைமதிப்பற்றவையாக அமைகின்றன.
நோய் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக்கூறு உள்ள நபர்களை அடையாளம் காண உதவுவதோடு, தடுப்பு அல்லது ஆரம்ப சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவை வழிவகுக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் குணமடைவதற்கும், உயிர்வாழ்வதற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை இவை வழங்குகின்றன.”

சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரியா கபூர் பேசுகையில், “மலக்குடல், கருப்பை அல்லது கருப்பை உள்வரிச்சவ்வில் புற்றுநோய்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் குடும்பங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்த புற்றுநோய் பாதிப்புகளை யதேச்சையானது என்று அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் வந்த வரலாறு, மரபணு ரீதியில் ஏற்படும் பரம்பரை புற்றுநோய் நோய்க்குறியின் முதல் சுட்டிக்காட்டல் அம்சமாக பெரும்பாலும் இருக்கிறது.
இத்தகைய இடர்வாய்ப்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதில் அத்தியாவசியமான முதல் நடவடிக்கையாக மரபியல் பரிசோதனையும் மற்றும் கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பு திட்டங்களும் இருக்கிறது. திட்டமிட்ட கால அளவுகளில் கொலனோஸ்கோப்பி, உரிய நேரத்தில் நாளக்கட்டிகளை அகற்றுவது மற்றும் சில நேர்வுகளில் முன்தடுப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வது, புற்றுநோய்கள் முழுமையாக வளர்ந்து பெரிதாவதற்கு முன்பு இடையீட்டு சிகிச்சையை வழங்க எங்களுக்கு உதவுகிறது. இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற உதவ முடியும். குடும்பங்கள் மீது சுமத்தப்படும் உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான கடும் சுமையைக் குறைக்க முடியும்.” என்று கூறினார்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி இது குறித்து கூறியதாவது: “புற்றுநோயானது எங்களது குடும்பத்தில் ஒருவரை மட்டுமின்றி, எங்கள் நால்வரையும் பாதித்தபோது பெரும் அச்சுறுத்தலாக எங்களை மிரள வைத்தது. ஆனால், அப்போலோ கேன்சர் சென்டரில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையின் மூலம் உதவுவதோடு, தங்களது பணியை மட்டுப்படுத்தாமல், எமது சிகிச்சை பயணத்தில் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டலையும், கனிவையும் வழங்கினர். இன்றைக்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்; இதற்கு முன்பு இருந்த அச்சத்திற்குப் பதிலாக, நம்பிக்கையையும், தைரியத்தையும் கொண்டவர்களாக நாங்கள் வாழ்கிறோம். குடும்பங்களில் பரம்பரை நோயாக புற்றுநோய் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை அதன் பாதிப்பை அகற்றி, மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கும் என்பதை அப்போலோவின் சிகிச்சை எங்களுக்கு காட்டியிருக்கிறது.”

சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ல் எமது அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியும் மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குவது என்பதையும் கடந்து பயணிப்பதாக இருக்கிறது. மரபியல் ரீதியாக, பரம்பரை நோயாக வரக்கூடிய புற்றுநோய்கள் மீது சரியான தகவலை வழங்கி, விழிப்புணர்வை பரப்புவதும் எமது பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். பெரும்பாலான நேரங்களில், தங்களது குடும்பங்களில் பல உறுப்பினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை தங்களது மரபணுக்களில் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை உருவாக்கும் மரபணு பிறழ்வுகள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இது குறித்த விழிப்புணர்வு உரிய நேரத்தில் எடுக்கப்படும் சிகிச்சை நடவடிக்கையோடு இணையும்போது புற்றுநோயை வெல்வதற்கான வலுவான ஆயுதமாக அது மாறுகிறது.” என்று கூறினார்.
பரம்பரை புற்றுநோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதில் ACC – ன் இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்தியது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களின் விளக்க உரைகளும் மற்றும் நோயாளிகளின் நிஜ வாழ்க்கை வரலாறுகளின் பகிர்வுகளும் இதில் இடம்பெற்றன. இந்த சீரிய முயற்சிகளின் வழியாக, பரம்பரை புற்றுநோய் குறித்த கல்வியறிவை வழங்குவதிலும் மரபணு ரீதியிலான இடர்வாய்ப்பு பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதிலும், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மற்றும் தன்முனைப்புடன் சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் தனது தலைமைத்துவ நிலையை ACC தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; இந்தியாவெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பையும் இந்த முன்னெடுப்புகளின் மூலம் அது நிரூபிக்கிறது.

புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https://apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது.
இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.