செய்திகள் :

AusvEng: 'சதமடித்த இங்லிஸ்; சைலண்ட் ஆக்கிய மேக்ஸ்வெல்' - 'B' டீமை வைத்து இங்கிலாந்தை சாய்த்த ஆஸி

post image
சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியிருந்தன. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 டார்கெட்டை ஆஸ்திரேலிய அணி மிக நேர்த்தியாக சேஸ் செய்து முடித்திருக்கிறது. முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாத போதும் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியை வென்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.
Ben Duckett

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்துதான் டாஸை வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என எந்த பெரிய பௌலரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. அதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் போதாமையோடே இருந்தது. இருந்தாலும் சீரான இடைவேளையில் விக்கெட் எடுத்துக் கொண்டே இருந்தனர். ஓப்பனிங் இறங்கிய பில் சால்ட்டை ஆரம்பத்திலேயே வெளியேற்றினார் வார்சூயிஸ். இன்னொரு ஓப்பனரான பென் டக்கெட்தான் இங்கிலாந்தின் விடிவெள்ளியாக இருந்தார். ஆஸ்திரேலிய அணி என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எதற்கும் அசையவில்லை.

ஸ்மித் விதவிதமாக பீல்ட் செட் செய்தார். ஆனாலும் டக்கெட்டை அசைக்க முடியவில்லை, நின்று அடித்தார். அவருக்கு உறுதுணையாக ரூட்டும் ஆடினார். அவரும் அரைசதத்தைக் கடந்தார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 25 ஓவர்களில் 158 ரன்களை எடுத்தனர். இந்தக் கூட்டணி இங்கிலாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரூட் 68 ரன்களில் ஷம்பாவின் பந்தில் Lbw ஆன போதும் டக்கெட் தொடர்ந்து ஆடினார். பின்னாலயே 4 பீல்டர்களையும் வைத்து கட்டம் கட்டியெல்லாம் வீழ்த்த நினைத்தார்கள். ஆனாலும் அசராமல் நின்று சதமடித்தார். அதன்பிறகும் அதிரடியாகவே ஆடிக்கொண்டிருந்தார். 200 ஐ எட்டாமல் ஓயமாட்டார் என நினைக்கையில் 165 ரன்களில் லபுஷேன் பந்தில் Lbw ஆனார். கடைசியில் ஆர்ச்சர் 10 பந்துகளில் 21 ரன்களை அடித்து ஸ்கோரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிக் கொடுத்தார். மற்றபடி வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை.

Josh Inglis

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 352. மிகப்பெரிய டார்கெட். அதிரடியாகவும் ஆட வேண்டும். அதேநேரத்தில் பெரிய பெரிய பார்ட்னர்ஷிப்களும் அமைய வேண்டும் என்ற நெருக்கடியுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆரம்பமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஓப்பனர் ஹெட்டும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் சொற்ப ரன்களில் அவுட் ஆனர். ஹெட் ஆர்ச்சரின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட். ஸ்டீவ் ஸ்மித் மார்க்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். விக்கெட் அடுத்தடுத்து விழுந்த சூழலிலும் ரன்ரேட்டை பெரிய சுமையாக ஏற விடாமல் ஆஸ்திரேலியா பார்த்துக் கொண்டது. இன்னொரு ஓப்பனரான மேத்யூ ஷார்ட் நின்று அரைசதம் அடித்தார்.

லபுஷேனும் சிறப்பாக ஆடி 47 ரன்களை எடுத்திருந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டை அந்த அணிக்கு கொடுக்கவில்லை. ரன்களை வாரி வழங்கினர். அதனால் ஸ்பின்னர்களுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டியிருந்தது. ஜோ ரூட்டெல்லாம் 4 ஓவர்கள் வீசியிருந்தார். இதற்கு பலனும் கிடைத்தது. மேத்யூ ஷார்ட் லிவிங்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட். லபுஷேன் அடில் ரஷீத்தின் பந்தில் அவுட். இதன்பிறகுதான் ஜாஸ் இங்லிஸூம் அலெக்ஸ் அலெக்ஸ் கேரியும் கூட்டணி சேர்ந்தனர். 136-4 என்ற நிலையில் இருந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 146 ரன்களை சேர்த்தனர். ஜாஸ் இங்லிஸ் மிகச்சிறப்பாக ஸ்பின்னர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்.

Australia

பின்னங்காலை பயன்படுத்தி கட்களை ஆடினார். இறங்கி வந்து நேராக நிறைய ஷாட்களை ஆடினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். எந்தவிதமான பந்து வீசப்பட்டாலும் எதிர்கொள்ளும் ஆயுதமாக பல ஷாட்களை கையில் வைத்திருந்தார். அலெக்ஸ் கேரியும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடி அரைசதத்தை எட்டினார். கேரி 69 ரன்களை கார்ஸின் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆனார். அந்த சமயத்தில் ஆஸியின் வெற்றிக்கு 8.2 ஓவர்களில் 70 ரன்கல் தேவைப்பட்டது. டெத்தில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து மீண்டும் ஆட்டத்துக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேக்ஸ்வெல் எல்லாவற்றையும் மாற்றினார். க்ரீஸூக்குள் வந்தவர் படபடவென 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து கொடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஓடிஐயில் தனது முதல் சதத்தை அடித்த இங்லிஸ் 48 வது ஓவரில் மார்க் வுட்டின் பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

Australia

352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் சேஸ் செய்திருக்கிறது. ஐ.சி.சி தொடர்களில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச டார்கெட் இதுதான். அதை ஒரு இரண்டாம் கட்ட அணியை வைத்து ஆஸ்திரேலியா செய்ததுதான் ஆச்சர்யம்.

Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் - குழம்பிய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் லாகூரில் நடந்து வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் தவறாக ஒலிக்க விடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.Pakistan by mistakenly played Indi... மேலும் பார்க்க

Dhoni: "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதைக் கூற முடியாது..." - தோனி கூறுவதென்ன?

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரும் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் மும்பை மற்றும் ... மேலும் பார்க்க

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க