செய்திகள் :

Aviation: ஃப்ளைட்ல வேலை பார்க்கணும்னா பைலட்தான் ஆகணுமா? - விமானத் துறை படிப்புகளின் லிஸ்ட்

post image

இந்தியாவில் விமானங்கள் எப்போதுமே ஈர்ப்புக்குரியவைதான். வானத்தில் விமானத்தை வேடிக்கை பார்ப்பதே ஒரு அலாதி அனுபவம்தான். ஒரு சிலருக்கோ வேடிக்கை பார்ப்பதைத் தாண்டி விமானங்களிலேயே வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என்கிற ஆசையெல்லாம் இருக்கும்.

ஆனால் அதில் பைலட் பணியும், ஏர் ஹோஸ்டஸ் பணியும் தவிர்த்து பெரியதாக வேறு எந்தப் பணியும் பெரும்பாலோனோருக்குத் தெரியாது.

இவ்விரண்டு பணிகளையும் தாண்டி விமானத் துறையில் நிறைய பணிகள் இருக்கின்றன. அதற்கான சில படிப்புகள் இங்கே…

விமானத் துறை
விமானத் துறை

பி.எஸ்சி. ஏவியேஷன்

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

இந்த மூன்று ஆண்டுக்கால படிப்பில், ஏர்போர்ட் ஆபரேஷன், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் வெதர், நேவிகேஷன், விமான நிலையம் செக்யூரிட்டி அண்ட் சேப்டி, டேஞ்சரஸ் கூட்ஸ், ப்ளைட் ஆபரேஷன்ஸ், விமானம் புறப்படுவதற்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இன்டெர்னல் மெக்கானிஸம் ஆப் ஏர்கிராப்ட் போன்ற பாடங்களைக் கற்றுத்தருவார்கள்.

விமான நிலைய மேலாண்மை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, விமானப் பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

பி.எஸ்சி. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ்

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருப்பவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

ஏவியேஷன் படிப்பில் இருக்கும் பாடங்களுடன் ஏர்கிராப்ட் டிசைன், மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங் ஆகியவற்றைக் கூடுதலாகக் கற்றுத்தருவார்கள்.

லைன் மெயின்டனன்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ஏர்கிராப்ட் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட், பிளானிங் ஆப் ஏர்கிராப்ட் சர்வீஸிங், கிரவுண்ட் எக்யூப்மெண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் பணிகள் கிடைக்கும்.

விமானம்
விமானம்

பி.பி.ஏ. ஏர்லைன்ஸ் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட்

பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை உண்டு.

விமான நிலையம் இயங்கும் முறைகள், பணியாளர்களை நிர்வகித்தல், மற்ற துறைகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு மற்றும் அவசரக் கால நிர்வாகம், சரக்கு போக்குவரத்து நிர்வாகம் போன்றவற்றை இதில் கற்றுத்தருவார்கள்.

கேபின் க்ரூ, விமான நிலைய திட்டமிடல் மற்றும் சரக்கு மேலாண்மை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலாண்மை படிப்பிற்கான சான்றிதழ்; வேலை வாய்ப்பு- வொர்க்ஃப்ரீக்ஸின் புதிய ஒப்பந்தம்

சென்னையில் உள்ள வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற சிட்டி யுனிவர்சிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல... மேலும் பார்க்க

`எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு பங்களிக்கிறது' - பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தாலிபன்கள் தடை

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தாலிபன்கள் விதித்த தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் இரண்டாம் ப... மேலும் பார்க்க

Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன படிக்கலாம் தெரியுமா?

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரைப் பெரும்பாலான மாணவர்கள் MBBS படிப்பைத் தேர்வு செய்து படிப்பார்கள்.ஆனால் எம்பிபிஎஸ் தவிர அதிக அளவு வேலைவாய்ப்புகள் இருக்கக்கூடிய சில மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளும்... மேலும் பார்க்க