விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
Basics of Share Market 22: 'Trend Analysis' பற்றி தெரிந்துகொள்வோமா?!
இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலையில் இருக்கிறோமோ, இல்லையோ நிச்சயம் ட்ரெண்டில் இருக்க வேண்டியது அவசியம். அந்தளவுக்கு ட்ரெண்ட் முக்கியமானதாக மாறிவிட்டது. இதே ட்ரெண்ட் விஷயத்தை பங்குச்சந்தையிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
'என்னது...இங்கேயும் ட்ரெண்டா?' என்று யோசிக்காதீர்கள். நீங்கள் லாபம் பெற வேண்டுமானால், இதை பின்பற்றி தான் ஆக வேண்டும். பங்குச்சந்தை ட்ரெண்டை நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள வழிகளில் கண்டுபிடிக்கலாம்...
எந்த பங்கை வாங்க விரும்புகிறீர்களோ, அது முன்னாள் எப்படி இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். எவ்வளவு விலை வரைக்கும் சென்றிருக்கிறது...எந்த விலைக்கு பின் கீழே இறங்கியிருக்கிறது...அந்தப் பங்கின் தற்போதைய நிலை என அனைத்தையும் ஆராய்வதன் மூலம் ஒரு பங்கின் தற்போதைய ட்ரெண்டை தெரிந்துகொள்ளலாம்.
நேற்றைய அத்தியாயத்தில் பார்த்த வால்யூமை இங்கே பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பங்கை எத்தனை பேர் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். மேலும் தற்போது ட்ரெண்டில் இருக்கும் பங்குகளை தெரிந்துகொள்ள சில வலைதளங்கள் மற்றும் ஆப்கள் உண்டு. ஆனால், எந்த வலைதளம் அல்லது ஆப்பில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நம் முதலீடு சரியாக அமையும்.
அடுத்ததாக உலகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அது பொறுத்தும் ட்ரெண்டுகள் அமையும். அம்பானி நிறுவனத்தைப் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது, அந்தப் பங்குகள் ஆட்டம் கண்டது. நேற்று அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பங்குச்சந்தையில் ஒரு ஏற்றம் இருந்தது. ஆக, பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
ராஜ் துணிக்கடையுடன், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொழிலில் இறங்குகுறார் என்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல மதிப்பு உண்டு. அதை ஆராய்ந்து, எதிர்கால ட்ரெண்ட் உணர்ந்தும் ராஜ் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.
இவைகளை நீங்கள் பின்பற்றினாலே, Trend Analysisல் நீங்கள் 'கிங்'
நாளை: மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன - தெரிந்துகொள்வோமா?!