அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
BB Tamil 8: `என் தம்பி முத்துக்குமரன் தமிழ்நாட்டையே ஜெயிச்சிருக்கான்!' - தீபக் எக்ஸ்க்ளுசிவ்
பிக் பாஸ் சீசன் 8 முடிவை எட்டியிருக்கிறது.
டைட்டிலை முத்துக்குமரன் தட்டிச் சென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் அதிரடியான கேம்மை விளையாடி முடித்து வெளியேறி இருக்கும் தீபக்கை சந்தித்துப் பேசினோம். ஃபைனல்ஸில்கூட முத்துக்குமரனின் வெற்றியை தன்னுடைய வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்திருந்தார் தீபக்.
பேச தொடங்கிய அவர், ``தமிழக மக்களுக்கு பரிச்சயமான நான் இப்போ மக்களுக்கு தீபக்காக தெரிஞ்சிருக்கேன். இந்த பரிமாணத்துக்கு பிக் பாஸுக்குதான் நான் நன்றி சொல்லணும். என்னுடைய கேம் எங்க முடிஞ்சதுனு தெரில. மக்களுக்கு ஓட்டு போட மறந்திருக்கலாம். மக்கள் மனசுல நாம் பதிந்திருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம். என்னுடைய தம்பி முத்துக்குமரன் வென்றதுல ரொம்ப மகிழ்ச்சி. வார்த்தைகளால அந்த சந்தோஷத்தை சொல்ல முடியாது. என்னுடைய நடவடிக்கைகளிலேயே உங்களுக்கு அந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். முத்து ஜெயிச்சது மட்டும் கிடையாது. அவன் தமிழ்நாட்டையே ஜெயிச்சிருக்கான்.
முத்துக்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே அவனுடைய பக்குவம்தான். அவங்க பெற்றோர் அவனை ரொம்ப அழகாக வளர்த்திருக்காங்க. நேத்து முத்து குடும்பத்தோட எங்க வீட்டுலதான் தங்கியிருந்தான். அவன் வந்தது ரொம்பவே நிறைவாக இருந்தது. என்னுடைய மகனும் முத்துவும் ரொம்ப ப்ரண்ட்ஸாகிட்டாங்க. பிக் பாஸ் வீட்டுல கேப்டன் இப்படிதான் இருக்கணும்னு பென்ச் மார்க் நான் அமைச்சதாக பிக் பாஸ் சொன்ன விஷயம் எனக்கு ரொம்பவே பெருமையாக உணர வச்சது. " என்றவரிடம் `` பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களின் மனைவி வந்த சமயத்தில் வைத்த விமர்சனங்களை பார்த்து சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பிக் பாஸுக்கு சரியான போட்டியாளர் என்றார்களே..'' என்றதும், ``அவங்க கேம்குள்ள பயங்கரமாக விளையாடினாங்க.
`நான்லாம் போனால் நான் பேசுற பேச்சுக்கு உடனே என்னை நாமினேட் பண்ணி அனுப்பிடுவாங்க'னு இந்த விஷயத்தை பண்ணி சொன்னாங்க. ஒரு சமயத்துல எனக்கும் அருணுக்கும் சண்டை வந்தப்போ...நான் கண்கலங்கியதை தாண்டி அந்த விஷயத்தை அவனுக்கு நாம் புரிய வைக்கணும்னுதான் முனைப்போட இருந்தேன். அவன் கோபப்பட்டான், நானும் கோபப்பட்டேன். அந்த சமயத்துல வார்த்தைகள் தவறாகப் போகுதுனு உணர்ந்து அவன்கிட்ட நான் பேசினேன்.
நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது என்னுடைய நண்பன் சஞ்சீவ் கிட்ட பிக் பாஸ் பற்றி கேட்கும்போது, ``ஜாலியாக இருக்கும். போயிட்டு வா'னு சொன்னான். வெளில வந்ததுக்குப் பிறகு `என்கிட்ட கேட்டீயே, நீ சூப்பராக கேம் விளையாடின'னு சொன்னான். நான் வெளில பி. ஆர் வைக்கல. என் மனைவிதான் எனக்கு பெரிய பி.ஆர். எனக்கு ஆர்கானிக்காக மக்களோட அன்பு கிடைச்சது.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...