மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
BB Tamil 8: "எப்படி ராணவ் கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்க?" - வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி
இந்த வார செங்கல் டாஸ்கில் ராணவும், ஜெஃப்ரியும் மல்லுக்கட்டி உருண்டதில் ராணவ்விற்குத் தசைநார் கிழிவு ஏற்பட்டது.
கீழே விழுந்து தோள்பட்டை வலியால் துடிக்கும் ராணவ்வைப் பார்த்து அன்ஷிதா, ஜெஃப்ரி, சவுந்தர்யா உள்ளிட்டோர் ‘அவன் நடிக்கிறான்’ என்கிற மாதிரி கிண்டல் செய்தது முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. ராணவ்வின் பாதிப்பிற்குக் காரணமாக இருந்த ஜெஃப்ரியோ, சற்றுகூட குற்றவுணர்வோ, பரிதாபமோ இன்றி, “அவனை என்ன ஆஸ்பிட்டலுக்கா தூக்கிட்டுப் போயிருக்காங்க?” என்று அசால்டாக பேசியிருந்தார். இதுவே ஜெஃப்ரிக்கு நடந்திருந்தால் எல்லோரும் துடித்துப் போய் இருப்பார்கள். ராணவ்வை மட்டும் கிள்ளுக்கீரையாக நடத்துவது ஏன் என்பதுதான் இந்த வார வீக்கெண்டில் பஞ்சாயத்திற்கு வந்திருக்கிறது.
இன்று வெளியாகியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 76 வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் அன்ஷிதா, ஜெஃப்ரி, சவுந்தர்யா மூவரையும் கண்டித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "எப்படி ராணவ் கேவலமா நடிக்கிறானு சொன்னீங்க சவுந்தர்யா? பேச வரும்னு என்ன வேணுனாலும் பேசலாமா அன்ஷிதா? ஏஞ்சல் டாஸ்க் நியாயம் பேசுனீங்க, இப்போது அது எங்க போச்சு? இதே ஜெஃப்ரிக்கு ஏதாவது ஒன்னுனான எல்லாரும் வந்திருப்பாங்க. ராணவ்வுக்கு யாரும் வரமாட்டிங்க அப்படிதான?" என்று காரசாரமாகப் பேசியிருக்கிறார். விஜய் சேதுபதியின் கேள்விக்கு வீட்டார் என்ன பதில் சொல்கிறார்கள் என்று இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...