BB Tamil 8: 'ஜாக்குலின், பவித்ரா, அருண்... டாஸ்க்கில் பங்கேற்கக்கூடாது' - பிக் பாஸின் அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே மோதல்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை பிக் பாஸ் கொடுக்கிறார்.
அதாவது டிக்கெட் டு ஃபினாலேவின் கடைசி டாஸ்க்கில் பாயிண்ட்ஸ் இல்லாத பவித்ரா, ஜாக்குலின், அருண், விஷால் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கிறார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு போட்டியாளர்களுக்கு டாஸ்க் நடக்கிறது. 'ரிசல்ட்ஸ் சனிக்கிழமை தெரியும்' என்று பிக் பாஸ் தெரிவிக்க போட்டியாளர்கள் அதிர்ந்துபோய் பார்க்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...