எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
BB Tamil 8: நாமினேட் ஆன முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஷிதா; இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
பிக் பாஸின் 57-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்றைய புரோமோவில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைச் சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லணும் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொருவராக வந்து ஓப்பன் நாமினேட் செய்கிறார்கள். அவ்வகையில் முதல் ஆளாக முத்துக்குமரனை நாமினேட் செய்திருக்கிறார் பவித்ரா ஜனனி. நிறைய பிரச்னைக்கு நீங்கதான் காரணமாக இருக்கீங்க என முத்துக்குமரனிடம் தெரிவித்தார் பவித்ரா. அதைக் கேட்டு முத்துக்குமரன் கூலாக சிரிக்கிறார்.
இதையடுத்து அருண் பிரசாத்தும் முத்துக்குமரனைதான் நாமினேட் செய்திருக்கிறார். 'மத்தவங்கள தூண்டிவிடுறீங்க. அதனால் உங்களை நாமினேட் செய்கிறேன் என்றார் அருண் பிரசாத். மஞ்சரிகிட்ட நிறைய நெகட்டிவ் தான் இருக்கு என்று கூறி, அவரை அன்ஷிதாவும், ரஞ்சித்தும் நாமினேட் செய்திருக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததால் பவித்ரா ஜனனியை நாமினேட் செய்கிறேன் என்றார் முத்துக்குமரன்.
மண்டையக் கழுவாத மாதிரியும், கழுவுற மாதிரியும் எனக்குத் தெரியுது என ஆர்.ஜே. ஆனந்தியை நாமினேட் செய்கிறார் சவுந்தர்யா. குழந்தை தனத்தில் இருந்து வெளியே வரணும் என சாச்சனாவை நாமினேட் செய்திருக்கிறார் தீபக். புரியாத மாதிரி நிறைய இடத்தில் நடிக்கிறீங்களோனு தோனுது என ராணவை நாமினேட் செய்திருக்கிறார் ஜாக்குலின்.
இன்னும் நீங்க பூசி மொழுகிக்கிட்டே இருக்கீங்க என ரஞ்சித்தை நாமினேட் செய்திருக்கிறார் சத்யா. இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...