இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
BB Tamil 8: பணப்பெட்டி டாஸ்கில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்... `ஷாக்'கான போட்டியாளர்கள்!
கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளன.
இறுதி நாளில் வீட்டுக்குள் இருக்கப்போகிற டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில், வழக்கமாக இறுதி கட்டத்தில் திருப்பம் ஏற்படுத்தும் பணப்பெட்டி தருணத்துக்கு போட்டியாளர்கள் வந்தடைந்துள்ளனர். ஆனால் அதில் ஒரு பெரிய ட்விஸ்ட் வைக்கிறார் Biggboss!
இன்று பணப்பெட்டி குறித்து பிக்பாஸின் ரூல்களை வாசித்தார் முத்துக்குமரன்.
"பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக பணப்பெட்டியை எடுக்கும் நபர் கேமில் தொடரலாம். உங்களுக்கான சேலஞ்ச், 'ஒவ்வொரு நேரம் பெட்டி வைக்கும்போதும் மெயின் டோரிலிருந்து எவ்வளவு தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதும், பெட்டியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் திரும்புவதற்கான நேரமும் கொடுக்கப்படும்' அந்த நேரத்துக்குள் உள்ளே வந்துவிட்டால் அந்த பணம் உங்களுடையது, அப்படி வரவில்லை என்றால் உங்கள் பயணம் அத்துடன் முடிவடைகிறது" என வாசித்தார்.
பிக்பாஸ் இதுவரையில்லாத புதிய முயற்சியை மேற்கொள்கிறது. முதல்முறையாக போட்டியின் ஒரு பகுதி பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே நடக்கிறது.
பொதுவாக போட்டியாளர்களில் பலருக்கு பணப்பெட்டியை எடுக்கும் ஆர்வம் இருக்காது. 100 நாட்கள் வீட்டுக்குள் இருப்பவர்கள் பணப்பெட்டியை எடுக்க துளி கூட நினைப்பதில்லை. ஆனால் இந்த முறை பணப்பெட்டியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் திரும்பும் வாய்ப்பு இருப்பதனால் கிட்டத்தட்ட அனைவருமே அதை எடுக்க ஆர்வம் காட்டலாம்.
இந்த சவால் எவ்வளவு கடினமாக இருக்கப்போகிறது, இந்த விபரீதத்தில் ஈடுபடும் போட்டியாளர் மீண்டும் வீட்டுக்குள் செல்வாரா அல்லது அப்படியே வெளியேற வேண்டியதுதானா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.