செய்திகள் :

BB Tamil 8: `Manipulate-னா என்னானு இவங்களாலதான்...' குற்றச்சாட்டும் சுனிதா - கதறி அழும் சவுந்தர்யா

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.

இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக மாறியிருக்கிறார்.

BB8

இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அவர்களையும், இப்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமவில் வெளியிலிருந்து வந்திருக்கும் 8 பேருக்கும் உள்ளே இருக்கும் 8 பேருக்கும் மத்தியில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் ரீ பிளேஸ்மென்ட் செய்யத் தகுதியானவர்கள் யார் யார் என்றக் கேள்வியுடன் தொடங்குகிறது புரொமோ. அதில் பேசும் சுனிதா, ``இந்த வீட்லயே ஒருத்தர் ரொம்ப வீக் அது ஜாக்லின். manipulate-னா என்னானு ஒரு பிரின்சிபலே இவங்களாலே வெளியே போயிட்டு இருக்கு. ஜாக்லின் - சவுந்தர்யா இவங்க ரெண்டுபேர்கிட்டயும் இருக்குற ஒரு காமன் விஷயம் இவங்க ரெண்டு பேரும் ஜென்யூன் இல்ல." எனக் காரசாரமாக பேசியிருக்கிறார்.

BB8

இந்த வார்த்தைகளால் சப்தமாக அழுதுக்கொண்டே பேசும் சவுந்தர்யா, ``இவ்ளோநாள் இருந்ததுக்கு அர்த்தமே இல்லாதமாதிரி அவங்க பண்றாங்க..." எனப் புலம்புகிறார். இரண்டு தரப்புக்கு மத்தியில் விவாதங்களைக் கிளப்பும் இன்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடும் என எதிர்பார்க்கலாம்.

Serial Update: 'தொடரிலிருந்து விலகிய ரயான்; கர்ப்பமானதை அறிவித்த நடிகை; டிவியில் வென்ற அமரன்!'

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `பனி விழும் மலர்வனம்'. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தவர் ரயான். பிக்பாஸ் சீசன் 8 வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அழைப்பி... மேலும் பார்க்க

Siragadikka aasai : முத்து போடும் ஸ்கெட்ச்... முதல்முறையாக முத்துவுக்கு ஆதரவாகப் பேசிய விஜயா!

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் ரோகிணி வாரம். பெரும்பாலும் அவர் கதை தான் ஒளிப்பரப்பாகிறது. முத்துவுக்கு ரோகிணி மீதிருக்கும் சந்தேகம் வலுபெற்றுவிட்டது.மலேசியாவுக்கு போகலாம் என்று முத்து வீட்டில் இரு... மேலும் பார்க்க

Bigg Boss Jacquline : `சத்யாவும் ஜெஃப்ரியும் அப்படி சிரிச்சது...'' - ஜாக்குலின் Exclusive

பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.பணப்பெட்டி டாஸ்கில் களமிறங்கி நேரத்திற்கு, வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எவிக்ட்டாகியிருந்தார். டைட்டிலை தாண்டி மக்களின் அன்புக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ஜாக்க... மேலும் பார்க்க

`சைத்ராவும் நட்சத்திராவும் 'உருட்டு'னு சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ - ஜெய் ஆகாஷ் சொல்வதென்ன?

'நெஞ்சத்தைக் கிள்ளாதே'ஜெய் ஆகாஷ், ரேஷ்மா நடிக்க, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து, இருவரின் ரசிகர்களின்சமூக வலைதளங்களில் பரஸ்பரம் சண்டைபோட்டு வரு... மேலும் பார்க்க

BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் - ஒரு விரிவான அலசல்

அதான் சீசன் முடிஞ்சு டைட்டில் வின்னரையும் அறிவிச்சாச்சே? ‘விடாது கருப்பு’ மாதிரி எதுக்கு இன்னொரு கட்டுரை?! பிக் பாஸ் வீட்டையேகூட ஒவ்வொரு கதவா கழட்டி ஆணியைப் பிடுங்கிட்டு இருப்பாங்களே?! ஏன் இங்க தேவையி... மேலும் பார்க்க

BB Tamil 8: அன்று ஒரு பேட்டிக்காக சிறை வாசலில்..! - முத்துக்குமரன் வாழ்வில் சம்பவம் செய்த காலம்

அதிசயங்களை நிகழ்த்தவல்லது காலம். சிலர் அந்த அதிசயங்களுக்காக நெடுநாள் காத்திருக்க வேண்டி வரலாம். சிலருக்குத் தூங்கி எழும் நேரத்திலும் அதிசயங்கள் அரங்கேறியிருக்கும்.சுவாரஸ்யமான ஒரு அதிசயக் கதை பார்க்கலா... மேலும் பார்க்க