வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
BB Tamil 8: 'எனக்கு இப்படி பேசுறதே டென்ஷன் ஆகுது' - பவித்ரா, மஞ்சரி மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. முத்துகுமரன், ரயான், ஜாக்குலின் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் பவித்ரா, மஞ்சரி இடையே மோதல் ஆரம்பமாகி இருக்கிறது. ' ``நான் உங்கிட்ட ரொம்ப பொறுமையா பேசுறேன். அப்படி இல்லனா சொல்லுங்க அதைவிட்டுட்டு அக்லியா பண்ற அப்படியெல்லாம் தேவையில்லாத வார்த்தையைப் பேசாதீங்க மஞ்சரி' என்று பவித்ரா கோபப்படுகிறார். ``எனக்கு இப்படி பேசுறதே டென்ஷன் ஆகுது' என்று பதிலுக்கு மஞ்சரியும் கோபப்படுகிறார்.