Bigg Boss Jacquline : `சத்யாவும் ஜெஃப்ரியும் அப்படி சிரிச்சது...'' - ஜாக்குலின் Exclusive
பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.
பணப்பெட்டி டாஸ்கில் களமிறங்கி நேரத்திற்கு, வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எவிக்ட்டாகியிருந்தார். டைட்டிலை தாண்டி மக்களின் அன்புக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ஜாக்குலின். அவரை சந்தித்து அவருடைய பிக் பாஸ் பயணம் குறித்து பல விஷயங்கள் பேசினோம்.
பேச தொடங்கிய ஜாக்குலின், "பிக் பாஸ் வீட்டுக்குள்ள சாப்பாடுலாம் இல்லாமல் முழுவதுமாக யோசிச்சு எடை குறைஞ்சிருக்கேன். யோசிச்சால் பசிக்கும் ஆனால் சாப்பாடு இருக்காதே... பெரிய வீடு வேற அதுனால நடந்துகிட்டே இருப்போம். இப்போகிட்டதட்ட 10 கிலோ குறைஞ்சிருக்கேன். 15 வாரமும் நாமினேட் ஆகியிருந்தேன். நம்ம விளையாடின விளையாட்டுக்கு அடையாளம் கொடுத்து ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள வேற யாருக்கும் நடக்கல. ஒவ்வொரு வாரம் பயம் இருக்கும்தான். இப்போ அத்தனை வாரமும் மக்கள் கொடுத்த அன்பு நிறைவாக இருக்கு. முத்து டைட்டில் ஜெயிச்சதுல ரொம்பவே சந்தோஷம். அவர் அதுக்கு ரொம்ப தகுதியானவன்.
அவன் ஒவ்வொரு நாளும் பயங்கரமாக உழைச்சிருக்கான். நான் `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது குரலால சில விமர்சனங்களை சந்திச்சிருக்கேன். என்ன மாதிரி ஒரு பெண் குரலால விமர்சனங்களை சந்திச்சிருக்காங்கனு கேள்விப்படும்போது உடனடியாக செளந்தர்யாகூட கனெக்ட்டாகிட்டேன். செளந்தர்யா முதல் ரெண்டு வாரம் பேசுறதுக்கு பயந்துட்டே இருந்தாள். அந்த சமயத்துல அவளுக்கு யோசிக்கிறது பிரச்னை கிடையாது. பேசினால் யாராவது கிண்டல் பண்ணுவாங்கனு யோசிச்சா." என்றவரிடம், " நீங்க செளந்தர்யாகூட நின்ற மாதிரி அவங்க உங்ககூட நிக்கலனு வருதப்பட்டிருக்கீங்களா?'' எனக் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு, ``நான் ஒருத்தவங்களுக்கு எவ்வளவு ப்ரண்ட்டாக இருந்திருக்கேன்னுதான் பார்க்க முடியும்.இன்னொருதவங்க ஏன் நம்மகிட்ட இப்படி இல்லனு யோசிக்கமாட்டேன். `என்னைப் பொறுத்தவரையும் ப்ரண்ட்ஷிப் கேம்மை எந்த இடத்திலையும் கெடுக்கக்கூடாது. நான் எல்லோருக்கும் போய் நிப்பேன். எனக்கு நீங்க அன்பு கொடுக்கணும், கொடுக்க வேண்டாம்கிற விஷயத்தை நீங்க முடிவுப் பண்ணிக்கோங்கடா!'னுதான் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளையும் சொல்லியிருந்தேன். நம்மளும் மனுஷங்கதான், ஏன் நமக்காக வரலைனு சில இடத்துல தோனுச்சுதான். ஆனால், அவங்களோட சூழ்நிலையையும் நான் புரிஞ்சுகிட்டேன். மஞ்சரி ரொம்பவே ஒரு நேர்மையான நபர். கோபம், வெறுப்பு, அன்புனு எந்த விஷயத்தையும் அவங்க உள்ளையே வச்சுக்கமாட்டாங்க.
அது அவங்க மூஞ்சிலேயே தெரிஞ்சிடும். நான் மஞ்சரிகூட ஒட்டிகிட்டேன்னு சொன்னாங்க. ஆனால், நான் மஞ்சரிகூட போய் பேசல. அவளாகவேதான் என்கூட வந்து பேசினாங்க. நாங்க பேசிட்டு இருக்கும்போது மஞ்சரியாகவே வந்து பேசினாள். அப்போதான் அவளுக்கு அன்பு தேவைப்படுதுனு புரிஞ்சுகிட்டேன். அப்படிதான் எங்களுக்கு நல்ல நட்பு மலர்ந்தது.
சத்யாவும் ஜெஃப்ரியும் என்னுடைய எவிக்ஷன் நேரத்துல மத்தவங்க அழுததை பார்த்து சிரிச்சதாக சொன்னாங்க. அவங்க என்ன காரணத்திற்காக வேணாலும் சிரிச்சிருகலாம். அதை கேட்கிறதுக்கு நான் யாரு? நான் வெளில போகும்போது அழுகணும்னு சொல்றதுக்கு நான் யாரு? `அவங்க ரெண்டு பேரை தப்பு சொல்லாதீங்க. அது அவங்க எமோஷன். ஜாக்குலினோட எவிக்ஷன் உங்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம். அதுக்காக பக்கத்துல இருக்கிறவங்களுக்கு கஷ்டமாக இருக்கணும்னு அவசியம் கிடையாது'னு பலர்கிட்டையும் நான் சொன்னேன்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!