செய்திகள் :

Brain: நினைவாற்றலையும், அறிவாற்றலையும் மேம்படுத்த 30 நிமிடங்கள் போதும் - ஆய்வில் புதிய தகவல்!

post image

தினசரி காலையில் உற்சாகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் அவர்களது உடல் மட்டுமல்ல மன நலனையும் சிறப்பாகப் பேணுகின்றனர் என்பது சமீபத்திய ஆய்வில் உறுதியாக நிரூபணமாகியிருக்கிறது.

ஆய்வு மேற்கொண்டது யார்?

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதன்மை ஆசிரியர் மிகேலா ப்ளூம்பெர்க், "உடற்செயல்பாடுகள் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நல்ல தூக்கம் அதற்கு உதவுகிறது" எனக் கூறியுள்ளார்.

Mikaela Bloomberg

இந்த ஆய்வானது, 30 நிமிடம் மிதமான அல்லது தீவிரமான உடற்செயல்பாடும் குறைந்தபட்சம் 6 மணிநேரம் தூக்கமும் அடுத்தநாள் நமக்குச் சிறந்த அறிவாற்றலை வழங்கும் எனக் கூறுகிறது.

இந்த ஆய்வு பற்றிய தகவல்கள், நடத்தை ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளுக்கான சர்வதேச இதழில் ( International Journal of Behavioural Nutrition and Physical Activity) வெளியாகியிருக்கின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்கள் உடற்செயல்பாடுகளை மேற்கொள்வதால் குறுகிய காலத்துக்கு (நிமிடங்கள், மணிநேரங்கள்) அறிவாற்றல் மேம்பாடு கிடைக்கும் என்பது ஏற்கெனவே கண்டறியப்பட்ட உண்மை. இதனை ஆய்வக தரவுகள் அடிப்படையில் நிரூபித்திருக்கின்றனர்.

ஆய்வக தகவல்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தும்போது உடற்செயற்பாடுகளால் மூளைக்குக் கிடைக்கும் பல்வேறுவிதமான பயன்கள் மற்றும் அவற்றின் நீண்டநாள் பலன்கள் பற்றித் தெரியவந்துள்ளது.

Physical Activity

இந்த ஆய்வில் உடற்செயல்பாடுகள், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், நரம்பியல் கடத்திகள் எனப்படும் ரசாயனங்களைத் தூண்டுவதைக் கண்டறிந்துள்ளனர்.

எப்படி நடைபெற்றது சோதனைகள்?

இந்த ஆய்வுக்காக 50 வயதுக்கு மேற்பட்ட டிமென்ஷியா, அறிவாற்றல் குறைபாடு உடைய 76 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு accelerometer கருவியை அணிவித்து, தூக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்துள்ளனர்.

அவர்களுக்குத் தினமும் ஆன்லைன் சோதனை வைத்து அவர்களின் நினைவாற்றல், கவனம் ஆகியவற்றைக் கணக்கிட்டுள்ளனர்.

உடற்செயல்பாடுகளில் அதிகரிக்கும் ஒவ்வொரு 30 நிமிடமும் நமது எபிசோடிக் நினைவு மதிப்பெண்களில் (Episodic Memory Score - EMS) 2 முதல் 5 விழுக்காடு அதிகரிக்க உதவும் என ஆய்வு முடிகள் கூறுகின்றன. "சிறிய அளவில் அறிவாற்றல் குறைபாடு இருப்பவர்களுக்கு மிகச் சிறிய ஊட்டத்தை இது அளித்தாலும் தினசரி மேற்கொள்ளும்போது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்" எனக் கூறியுள்ளார் ப்ளூம்பெர்க்.

Dementia

"வயதானோரின் அறிவாற்றலை பாதுகாப்பதே நோக்கம்"

இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களைச் சோதிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ப்ளூம்பெர்க்.

வயதாகும் போது நம் மூளை செயல்பாடுகளை எப்படிப் பாதுகாப்பது எனக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம் எனக் கூறியுள்ளனர்.

"ஏனெனில் வயதாகும்போது இயல்பாகவே நம் அனைவருக்கும் அறிவாற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதனால்தான் நாங்கள் அந்த வயதினரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தினசரி சிறிய முயற்சிகளை மேற்கொண்டு அவர்களின் அறிவாற்றல் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் சமூக பங்கேற்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார் ப்ளூம்பெர்க்.

Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் என்ன?

Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க ... மேலும் பார்க்க

NASA: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப மேலும் தாமதமாகலாம் - காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்ப 2025 மார்ச் மாத இறுதி வரை ஆகலாம் எனக் கூறியிருக்கிறது NASA. க்ரூ-10 என்ற பத்தாவது விண்வெளிக்க... மேலும் பார்க்க