செய்திகள் :

BSNL: 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.262 கோடி லாபம்! - எப்படி சாத்தியமானது?

post image

BSNL நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளத்து. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL.

அரசு நிறுவனமான BSNL அதன் விரிவாக்கம் மற்றும் சந்தாதாரர் அடிப்படையிலான சேவைகளில் கவனம் செலுத்த தொடங்கியபிறகு இது மிகப் பெரிய திருப்புமுனை எனக் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

கடந்த ஆண்டில் BSNL பல விஷயங்களில் முன்னனேறியிருக்கிறது. முழுமையான இயக்கமாக 14 முதல் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. வீட்டிற்கு ஃபைபர் சேவை (FTTH) வழங்குவதும் குத்தகைக்கு இணைப்புகளை விடுவதும் அதிகரித்துள்ளது. சிந்தியா கூறவதன்படி, சந்தாதாரர்கள் எண்ணிக்கை, ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்ததிலிருந்து 9 கோடியாக வளர்ந்துள்ளது.

"இந்த நாள் BSNL-க்கும் இந்திய தொலைத்தொடர்பு துறைக்கும் முக்கியமான நாள். கடந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு பதிவில் லாபமடைந்திருக்கிறது." என்றார் சிந்தியா.

ஜோதிராதித்ய சிந்தியா

அந்த காலாண்டில் மொபைல் தொடர்பு போன்ற சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய் 15% அதிகரித்துள்ளது. FTTH வருவாய் 18 %, குத்தகைக்கு விடப்பட்ட இணைப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய் 14% அதிகரித்துள்ளது.

கடந்தஆண்டில் மூன்றாம் காலாண்டில் புதிய விஷயங்களை செயல்படுத்துதல், நெட்வொர்க் விரிவாக்கம், செலவுகளை கவனமாக கையாளுதல் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை மேம்பாடுகளில் BSNL கவனம் செலுத்தியுள்ளது.

2023-24 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் நஷ்டம் 1,800 கோடி குறைந்துள்ளது. இதற்கு செலவுகளைக் குறைத்தது முக்கிய காரணம் என்கின்றனர்.

BSNL

வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக National WiFi Roaming, அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இலவச பொழுதுபோக்குக்காக BiTV, அனைத்து FTTH வாடிக்கையாளர்களுக்கும் IFTV சேவை போன்றவற்றை வழங்குகிறது.

இந்த ஆண்டு BSNL 4ஜி சேவையை வழங்கியது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக 1,00,000 டவர்கள் வைக்க திட்டமிடப்பட்டது. அதில் 75,000 டவர்கள் நிறுவப்பட்டுவிட்டன, 60,000 செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அனைத்து டவர்களும் செயல்பாட்டுக்கு வரும் என சிந்தியா தெரிவித்துள்ளார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

ராஜபாளையம்: விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு; பின்னணி என்ன?

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விசைத்தறித் தொழிலை நம்பி இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரி... மேலும் பார்க்க

`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!' - L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை' என்று குறைபட்டுக்கொண்டார். இது தொடர... மேலும் பார்க்க

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' - ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் ... மேலும் பார்க்க

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபை... மேலும் பார்க்க

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க