Career: 'பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்... மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!'
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் அசிஸ்டண்ட் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: தமிழ்நாட்டில் 40; புதுச்சேரியில் 2.
வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரி படிப்பில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: தமிழ்மொழியில் எழுத, படிக்க, பேச கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
ஆன்லைனில் முதற்கட்ட தேர்வு, மெயின்ஸ் தேர்வு. பிராந்திய மொழி தேர்வு நடக்கும்.
தேர்வு மையங்கள் எங்கே?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
புதுச்சேரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவர் 1, 2025
தேர்வு தேதிகள் என்ன?
முதற்கட்ட தேர்வு தேதி: ஜனவரி 27, 2025
மெயின்ஸ் தேர்வு தேதி: மார்ச் 2, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsonline.ibps.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.