தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!
Champions Trophy: "ரோஹித் பின்வாங்கமாட்டார்; விராட் செய்ய வேண்டியது..." - அஸ்வின் கணிப்பு என்ன?
ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்க நெருங்க கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் ஜாம்பவான்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.
கடந்த சில போட்டிகளில் இருவரும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் ரசிகர்களுக்கு இவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் பலமுறை அணியை சிக்கலில் தள்ளியிருக்கிறது என்றாலும், அவர் அவரது ஸ்டைலை மாற்ற வேண்டியதில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். மாறாக அவர், விராட் கோலி அணிக்கு பாலமாக செயல்பட வேண்டும் என்றிருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் போட்டி தொடர் மற்றும் Champions Trophy குறித்துப் பேசிய அஸ்வின், "ரோஹித் சர்மா 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடியதை கருத்தில்கொள்ளும்போது அவரிடம் எதும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை.
காலம் மாறுவதற்கு ஏற்ப ரோஹித் தன்னை மாற்றிக் கொண்டு முன்னணியில் இருந்து வழிநடத்திய விதத்தைப் பார்க்கும்போது, அவர் தனது வழக்கமான ஆட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்," என்றார் அஸ்வின்.
மேலும் விராட் கோலி குறித்து, "விராட் கோலி டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங் விளையாடியதைப்போல விளையாடவேண்டிய இடத்தில் உள்ளார் என்பதை உணர வேண்டும். அதிரடியான தொடக்கத்துக்கும் பேட்டிங்கின் இறுதி தருணத்துக்கும் இடையில் பாலமாக விராட் கோலி விளையாட வேண்டும்." என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-06/54cae4b3-f8f3-4097-a4b1-848507bf3362/GRQ5-ifbEAA1HGY.jpeg)
அத்துடன், "விராட் அவரது பலத்துக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினால், அணிக்கு அதைவிட சிறந்த விஷயம் எதுவுமில்லை. அவர் அவரது ஆட்டத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை." என்றார்.