இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை #VikatanPhotoCards
Coolie: ரஜினியின் 'கூலி' படத்தைப் பார்க்க விடுப்பு; செலவுக்கு ரூ.2,000 கொடுத்த சிங்கப்பூர் நிறுவனம்!
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சோபின், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' இப்போது 'கூலி' என அனிருத் - லோகேஷ் இருவரும் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இவையெல்லாம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் இயங்கி வரும் 'Former Constructions PTE LTD' என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் ஊழியர்களுக்கு ரஜினியின் 'கூலி' படத்தைப் பார்க்க சம்பளத்துடன் கூடிய விடுப்பும், முதல்நாள் முதல்காட்சிக்கான 'FDFS' டிக்கெட்டும், செலவுக்கு ரூ.2000 ($30) பணமும் கொடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இது குறித்து அந்நிறுவனம் கூறியிருப்பதாக சமுக வலைதளங்களில் பரவி வரும் அந்நிறுவனத்தின் அறிவிப்புக் கடிதத்தில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அன்று நம் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
#Coolie - In Singapore Farmers Constructions PTE LTD a company is giving their Tamil workers a paid holiday providing FDFS Tickets ($25) & a additional $30 For Food & Beverages for workers welfare & stress management
— Movies Singapore (@MoviesSingapore) August 11, 2025
SEMMA all this happens for one man #Thalaivar… pic.twitter.com/u5NAoqe4g0
மேலும், கம்பெனி அவர்களுக்கு படத்தின் FDFS டிக்கெட்டும், செலவுக்கு $30 (ரூ.2,000) பணமும் வழங்குகிறது. ஊழியர்களின் பணிச்சுமை மன அழுத்தைத்தைக் குறைக்க இதைச் செய்கிறோம்" என்று கூறியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...