செய்திகள் :

Coolie: '9 AM டு 2 AM' - ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!

post image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி திரையரங்குகளில் ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் ஒளிபரப்பாகும்.

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 14) அன்று காலை 9 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல்முறை இணைந்துள்ளது ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதும் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று டிக்கெட்டுகள் விற்றுத்தீர்கின்றன.

தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் நிலையில், அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் காலை 6 மணிக்கு காட்சிகள் தொடங்கவுள்ளன.

கூலி
கூலி

Coolie

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்தியராஜ், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உப்பேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வைரலாகியிருக்கும் நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. சினிமாவில் ரஜினிகாந்த் 50வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சரியாக ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியாவது குறிப்பிடுத்தக்கது.

Coolie: "கூலி ட்ரைலரில் வரும் 'அலேலா பொலேமா'வுக்கு அர்த்தம் இதுதான்" - அனிருத் விளக்கம்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ... மேலும் பார்க்க

Coolie: 'இந்த 13 வருஷத்துல 34 படத்துக்கு இசையமைச்சுருக்கேன், ஆனா...' - அனிருத்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ... மேலும் பார்க்க

Coolie: 'அப்பாவை எப்போதுமே ரொம்ப பிடிக்கும்; ஆனால் தற்சமயம் நான் ரஜினி சார்...' - ஸ்ருதி ஹாசன்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ... மேலும் பார்க்க

Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாகார்ஜுனா

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி... மேலும் பார்க்க

Urvashi: " `கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் நடந்த சுவாரஸ்யமான விஷயம்" - ஊர்வசி ஷேரிங்ஸ்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஊர்வசி. நகைச்சுவை தொடங்கி அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாகச் செய்யும் அவருக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை... மேலும் பார்க்க