திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
Coolie: 'இந்த 13 வருஷத்துல 34 படத்துக்கு இசையமைச்சுருக்கேன், ஆனா...' - அனிருத்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஹைதராபாத்தில் 'கூலி' படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய அனிருத், 'இந்த 13 வருடங்களில் 34 படங்கள் பண்ணியுள்ளேன். இதில் 'கூலி' எனக்கு சிறந்த அனுபவம். நாகர்ஜுனா சார் ஸ்டுடியோவில் நானும், லோகேஷ் கனகராஜும் எங்களின் டிரெண்ட்மார்க் போட்டோ எடுத்தோம். அது ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ஒரு ரசிகனாக 'கூலி' படத்தினை காண்பதற்கு பெரும் காத்திருப்பில் இருக்கிறேன்.
ஒரு இசையமைப்பாளராக இருந்தால் எல்லா லெஜண்டுகள் உடனும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்தவகையில் இந்தப் படத்தில் நாகார்ஜுனா சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் அவரை திரையில் பார்க்கும்போது நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நீங்களும் அவரை திரையில் பார்க்கும்போது ரசிபீர்கள். அவருடன் பணியாற்ற வாய்ப்பு அளித்த லோகேஷிற்கு நன்றி.

அதேபோல ரஜினி சார் சினிமாவில் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய முதல் படம் வெளியானது. அதே 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய 'கூலி' வெளியாகிறது. அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...