செய்திகள் :

Cryptic Pregnancy: `15 மாத கர்ப்பம்... கையில் குழந்தை' - பணம் பறிக்கும் மோசடி கும்பல்; உஷார் மக்களே!

post image

``இது என்னுடைய குழந்தை தான்... நான் 15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை'' என்று விசாரணையில் ஒரு பெண் அடம்பிடிக்க... அடித்துக்கூற ஆடிப்போயிருக்கிறார்கள் அதிகாரிகள்.

இது நடந்தது இந்தியாவில் அல்ல, நைஜீரியாவில்.

'குழந்தை இல்லையா' என்ற கேள்வியும், 'எப்ப குழந்தை பெத்துக்க போறீங்க' என்ற கேள்வியும் நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தொடரும் போலும். அந்தக் கேள்விகளுக்கான அதிர்ச்சி பதில் தான் இது.

நைஜீரியாவில் திருமணமாகி நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் பெண்கள் சமுதாயத்தின் அழுத்தம் தாங்காமல் 'கிரிப்டிக் பிரக்னன்ஸி' என்னும் மோசடியில் விழுந்து வருகின்றனர்.

ஊசி...பானம்...ஒரு பொருள்

ஊசி, பானம்... ஒரு பொருள்

நைஜீரியாவில் 'குழந்தை வேண்டும்' என்று வரும் தம்பதிகளுக்கு ஊசி போட்டு, ஏதோ ஒரு பானத்தை கொடுத்து, வெஜைனாவில் ஒரு பொருளை திணித்து நீங்கள் கர்ப்பம் ஆகிவிட்டீர்கள் என்று நம்பிக்கை கொடுத்து மோசடி செய்வது புதிய டிரெண்ட் ஆகியிருக்கிறது. இதற்கு பெயர் தான் கிரிப்டிக் பிரக்னன்ஸி. இந்தப் பிரெக்னன்ஸிக்கான விலை பல நூறு டாலர்கள்.

மோசடி என்றாலும், பல நூறு டாலர்கள் என்றாலும், 15 மாதங்கள் கர்ப்பம் என்றாலும் அந்தத் தம்பதிகளின் கையில் கடைசியில் எப்படியோ குழந்தை கிடைத்துவிடுவது தான் இன்னும் இந்த மோசடி பெரிய அளவில் வெட்ட வெளிச்சம் ஆகாததற்கு முக்கிய காரணம். ஆனால், அந்தக் குழந்தை உண்மையில் அவர்களுடையது தானா என்பது தான் பெரிய கேள்விக்குறி.

வழக்கமான முறை அல்ல!

குழந்தை இல்லை என்று செல்லும் தம்பதிகளுக்கு முதலில் சொல்லப்படும் தகவல், 'வழக்கமான முறை கர்ப்பம் அல்ல இது' என்பதாகும். அப்புறம், முதலில் போடப்படும் கண்டிஷன், 'எக்காரணத்தை கொண்டும் எந்த டாக்டரிடமும் நீங்கள் இடையில் செல்லக்கூடாது... செக் செய்யக்கூடாது'.

பின்னர், மேலே கூறப்பட்டதுபோல அவர்களுக்கு ஊசி போடப்படும். பின்னர் பானம், அதன் பின்னர் வெஜைனாவில் ஏதோ ஒரு பொருள் திணிக்கப்படும் மற்றும் கொடுக்கப்படும். இடையிடையே கர்ப்பம் ஆனதாக சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன்எடுக்கப்படும். குழந்தையின் ஹார்ட் பீட், அசைவு எல்லாமே ஸ்கேனின் போது காட்டப்படும்.

pregnancy (Representational Image)

ஃபீல் இருக்காது...

ஆரம்பத்தில், அந்தப் பெண்ணுக்கு, தான் கர்ப்பம் என்பது மாதிரியான எந்த ஃபீலுமே இருக்காது. ஆனால், போகப்போக வயிறு வளரும். பின்னர், 'ஒரு ஊசி போட்டால் தான், வலி வரும்' என்று கூறி ஊசி போடப்படும். இந்த ஊசி மிகவும் காஸ்ட்லியானது. வலி வர மயக்க மருந்து போடுவார்கள். எழுந்துப்பார்த்தால் அந்தப் பெண் பக்கத்தில் குழந்தை ஒன்று படுத்திருக்கும். அவ்வளவு தான், அந்தக் குழந்தை அவர்கள் செலவளித்த அத்தனை காசையும் மறக்கடிக்கச் செய்துவிடும்.

பிரசவம் பற்றி கேட்கும்போது சில பெண்கள், "எழுந்து பார்த்தப்போது அடி வயிற்றி ஆப்ரேஷன் செய்ததற்கான கோடு இருந்தது' என்றும், சில பெண்கள், "எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை...தூக்கம் வந்தது. ஆனால், குழந்தை பிறப்பது போலவே இருந்தது" என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த பிரசவ அனுபவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படுகிறது. ஆனால், வலியாகவே இருந்திருக்கிறது.

15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை

ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணுக்கு நடந்த சம்பவம் என்னவென்றால், அவர் கையில் இருக்கும் குழந்தை அவர்களுடையது அல்ல என்பதை குடும்பமே சொல்ல, தம்பதியர் மட்டும், "இது எங்களுடைய குழந்தை தான். நாங்கள் கிரிப்டிக் பிரெக்னன்ஸி மூலம் பெற்றிருக்கிறோம். 15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை இது" என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.

குழந்தை

குழந்தை இல்லை என்பதை டார்க்கெட் செய்து இந்த மாதிரியான மோசடிகள் முளைக்க தொடங்கியிருக்கிறது. 'டிஜிட்டல் மோசடி, பண மோசடி' என்று இதுவரை கேள்விப்பட்ட நமக்கு, இந்த மோசடி முற்றிலும் புதுசு. நைஜீரியாவில் தானே நடக்கிறது என்றில்லாமல், இப்படியும் மோசடி நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, 'எப்படி வேண்டுமாலும்' மோசடி நடக்கலாம் என்பதை புரிந்துகொண்டு உஷாராக இருங்கள் மக்களே!

கவனம்: 'ஆபீஸ் மீட்டிங்கிற்கு லேட்டாக செல்வீர்களா?!' - வெளிநாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஸ்கூல், காலேஜ் அல்லது ஆபீஸுக்கு ஒருநாளாவது லேட்டாக செல்லாத ஆட்கள் மிக மிக குறைவு. இன்னும் சிலர், ஆபீஸாக இருந்தாலும் சரி, மீட்டிங்காக இருந்தாலும் சரி லேட்டாக செல்வதை தங்களது வழக்கமாகக் கூட வைத்திருப்பா... மேலும் பார்க்க