செய்திகள் :

Delhi: ``கெஜ்ரிவால் அதை செய்திருக்கணும்; தேர்தல் தோல்விக்கு காரணம் இதுதான்'' - பிரசாந்த் கிஷோர்

post image
அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபைத்  தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கிறது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக டெல்லியை ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியைப் பறிக்கொடுத்திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் ஆம் ஆத்மி நிச்சயம் வென்று இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களைக் கூறியிருக்கிறார். “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜாமீனில் வெளிவந்த பிறகு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுமட்டுமின்றி கெஜ்ரிவால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அதீதமாக முன்னுரிமை கொடுத்துவிட்டார். அதேபோல அண்மை காலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இண்டியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
பிரசாந்த் கிஷோர்

தற்போதைய சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி எழுச்சி பெறுவது மிகவும் கடினமான விஷயம். ஆகவே, தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா?

Doctor Vikatan:வாய்ப்புண் என்பது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா... சாதாரண வாய்ப்புண்ணுக்கும் புற்றுநோய் புண்ணுக்குமான வித்தியாசங்களைஎப்படிக் கண்டறிவது... கூர்மையான பற்கள்வாய்ப் புற்றுநோயை ஏற... மேலும் பார்க்க

நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழ... மேலும் பார்க்க

`நடனமாடி கொண்டிருக்கும்போதே பெண் மரணம்!' - அதிர்ச்சி வீடியோ; மருத்துவர் சொல்வதென்ன?

நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் பரிணீதா ஜெயின். இவர் எம்.பி.ஏ ... மேலும் பார்க்க

ADMK: `ஜெயலலிதாவை அவமதித்து விட்டார்கள்; செங்கோட்டையன் செய்தது சரிதான்' -டிடிவி தினகரன் சொல்வதென்ன?

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர். ... மேலும் பார்க்க

ADMK: எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்..? - ஜெயக்குமார் விளக்கம்

அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தது தொடர்பாகவும் அதற்கு செங்கோட்டையன் அளித்த வ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (51). இவர் தி.மு.க-வில் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது கோவிந்தராஜ் அடாவடிகளில் ஈடுபடுவார் என்கிறார்கள். சில வாரங்களுக்கு... மேலும் பார்க்க