செய்திகள் :

Deva: "'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்

post image

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது.

இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார்.

Deva Concert
Deva Concert

அதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேவா பேசுகையில், "'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள்.

அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன்.

நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன்.

தேவா
தேவா

இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது.

நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது.

வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன்" எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?

சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ... மேலும் பார்க்க

Vijay: "விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா?" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பதில் என்ன?

"மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும்" என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார்.நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்... மேலும் பார்க்க

Madharaasi: "இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்'' - 'மதராஸி' குறித்து சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வ... மேலும் பார்க்க

Madharaasi Review: ஆக்‌ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?

தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜ... மேலும் பார்க்க