செய்திகள் :

Dhoni: 'என் வழி.. தனி வழி' - மாஸாக பஞ்ச் டயலாக் பேசிய தோனி; வைரலாகும் வீடியோ

post image
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோனி  தமிழ் பட வசனங்களை பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhoni, sanju samson

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் மற்றும் எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அங்கு ஏதாவது தமிழ் பட வசனம் பேச சொல்லி கேட்டபோது சஞ்சு சாம்சன் “எனக்கு ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும்.. நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவெ சொன்னா மாதிரி” என்று பேசிக் காட்டி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தோனியையும் ஏதாவது ஒரு வசனம் பேச சொன்னபோது அவர் படையப்பாவில் வரும் “என் வழி தனி வழி” என்ற டயலாக்கை பேசியிருக்கிறார்.  உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர். இதுதொடர்பான  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் த... மேலும் பார்க்க