WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன | IPS Finance - 260 | Vikatan
Divorce: ``விடுதலையாகி விட்டேன்" - 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்.. வைரலான வீடியோ
``இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்," என 40 லிட்டர் பாலில் ஒருவர் குளித்த வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோ தொடர்பாக வெளியான தகவலில், ``அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரியில் உள்ள பரலியாபர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரின் மனைவி திருமணம் மீறி உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், பெண் குழந்தை இருக்கிறது என்பதால் தொடர்ந்து மனைவியுடன் இருந்திருக்கிறார்.
இதற்கிடையில், இவரின் மனைவி இரண்டு முறை வீட்டைவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. அதனால், மனமுடைந்த அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருகக்கிறார்.
இந்த வழக்கில் அவருக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் வகையில்தான் `நான் விடுதலையாகிவிட்டேன்' எனப் பாலில் குளித்திருக்கிறார். இந்த வீடியோ மூன்று மில்லியனுக்கும் அதிகமான வீவ்ஸ் பெற்றது. பல சமூக ஊடக பயனர்கள் “நல்ல முடிவு” எனப் பாராட்டி வருகின்றனர்.