செய்திகள் :

Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்னதான் மாற்று?

post image

Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்... இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது மின்சாரத்தில் இயங்கும் லிக்விட் கொசுவிரட்டியும் பயன்படுத்துகிறோம்.

ஆனால், என் அப்பாவுக்கு வீஸிங் இருப்பதால், இவை எதுவுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை வருகிறது. கொசுக்களிலிருந்தும் தப்பிக்க வேண்டும், வீஸிங்கும் வரக்கூடாது என்றால் என்னதான் செய்வது... மூலிகை கலந்த கொசுவிரட்டிகள் பாதுகாப்பானவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

மாசு என்பது வெளிப்புறத்தில் இருந்து வருவதை மட்டும் குறிப்பதில்லை. வீட்டுக்குள்ளிருந்தும் மாசு பாதிப்பு ஏற்படலாம்.  அதை 'இண்டோர் பொல்யூஷன்' என்கிறோம்.

இண்டோர் ஏர் பொல்யூஷன் என்பது சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுப்பெரிப்பதில் தொடங்கி பல விஷயங்கள் வாயிலாகப் பாதிக்கக்கூடியது.

குறிப்பாக, இந்த வகை மாசானது, சிஓபிடி (Chronic Obstructive Pulmonary Disease ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பைத் தீவிரப்படுத்தக்கூடியது.

இது மட்டுமன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊதுவத்தி, சாம்பிராணி, கொசுவத்திச் சுருள் போன்றவையும் இதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே.

இவற்றைப் பயன்படுத்தும்போது புகை வருகிறது. இவற்றில் கெமிக்கல்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை.

கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. இவற்றின் வாடையும் ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு இவை ஆகவே ஆகாது.

வீஸிங், ஆஸ்துமா நோயாளிகள் வீட்டை தூசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாசனையையும் புகையையும் கிளப்பக்கூடிய சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, ரூம் ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியதும்.

பலரும் கொசுவத்திச் சுருள்தான் புகையை வெளியிடும், திரவ வடிவிலான கொசுவிரட்டியும் மேட் வடிவிலானதும்  பாதுகாப்பானவை என நினைக்கிறார்கள். இவையும் கொசுவத்திச் சுருள் போன்றவைதான்.

மிக முக்கியமாக இவை எவையுமே விளம்பரங்களில் காட்டுவது போல கொசுக்களைக் கொல்லப் போவதில்லை. கொசுக்களை வெளியே தள்ள முயலும், அவ்வளவுதான். 

கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை.

கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. வேறு வழியே இல்லை, கொசுவிரட்டி உபயோகித்தே ஆக வேண்டும் என்பவர்கள்,  திரவ வடிவிலான கொசுவிரட்டியை உபயோகிக்கலாம். 

அதை ஆன்செய்துவிட்டு தூங்கக்கூடாது. மலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆன் செய்துவிட்டு, பிறகு  அணைத்துவிட்டே தூங்க வேண்டும்.

நொச்சி இலை, வேப்பிலை என ஆர்கானிக் பொருள்களே ஆனாலும் அவற்றைக் கொளுத்தும்போது வெளிவரும் புகையானது ஆஸ்துமா, வீஸிங் நோயாளிகளுக்கு நல்லதல்ல.

பிரச்னை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. எனவே, மூலிகை கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதிலும் கவனம் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்' இயக்கம்

சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்... மேலும் பார்க்க

``மது கெடுக்கும்; கீழாநெல்லி காக்கும்'' - இதன் A to Z பலன்கள் சொல்கிறார் சித்த மருத்துவர்!

''மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மஞ்சள் நிறக் கண்கள் நினைவுக்கு வரலாம்; மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம். ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால் சூடான எண்ணெய் விடுவது சரியா?!

Doctor Vikatan: தூங்கும்போது சில நேரங்களில் காதுக்குள் பூச்சி புகுந்துவிடுவது நடக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் காதுக்குள் சூடான எண்ணெய் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும் என்கிறார்களே, அது சரியா... ... மேலும் பார்க்க

அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!

வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பத... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகர் ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை பயங்கர நோயா? - தீர்வு என்ன?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை தீவிரமாகி, நடிகர் ரோபோ சங்கர் இறந்திருக்கிறார். மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழக்கும் நபர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது அவ்வளவு பயங்கர நோயா... வராமல் தடுக்... மேலும் பார்க்க

Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!

எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..? இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்... மேலும் பார்க்க