செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தால் டான்சில்ஸ் பிரச்னை வருமா?

post image

Doctor Vikatan: என் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் சாக்லேட்டும் எப்போதாவது ஐஸ்கிரீமும் சாப்பிடுவான். அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, சளி பிடித்துக்கொள்கிறது. அவனுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வீக்கம் இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். சாக்லேட்டும் ஐஸ்க்ரீமும் கொடுத்தால் டான்சில்ஸ் பாதிப்பு அதிகமாகும் என நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

சாக்லேட்டுக்கும் இன்ஃபெக்ஷனுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் குழந்தைகள் அளவுக்கதிகமாக சாக்லேட் சாப்பிடும்போது வேறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். சாக்லேட்டில் கெமிக்கல் சேர்ப்பு மிக அதிகம் என்பதால் அளவு குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாக்லேட்டிலும் அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளதால் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

இன்று பல  குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருப்பதைப் பார்க்கிறோம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம். இனிப்பு உள்பட வீட்டில் தயாரிக்கப்படும்  உணவுகளால் இப்படி எந்தப் பிரச்னையும் வருவதில்லை. வெளியிடங்களில் வாங்கும்போது அவை எந்த அளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகின்றன, கையாளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகிறது. தொற்று ஏற்பட அதுதான் காரணம்.

பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம்.

ஐஸ்க்ரீமும் அதே போலத்தான். சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு, உடனே சாப்பிடுகிற போது ஐஸ்க்ரீமால் பிரச்னை வருவதில்லை. தயாரிக்கப்பட்டு பல நாள்கள் ஆகி, இடையில் குளிர்பதனப் பெட்டி இயங்காமல் உருகி, அதில் தொற்று ஏற்பட்டு அந்த ஐஸ்க்ரீமை சாப்பிடும்போதுதான் பிரச்னை வருகிறது.  ரொம்பவும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீமை சாப்பிடும்போது தொண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைகிறது. அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக ஐஸ்க்ரீமே சாப்பிடக்கூடாது என அர்த்தமில்லை. அடிக்கடி குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதைத் தவிர்ப்பது சிறந்தது.  சுத்தமாகத் தயாரிக்கப்ட்ட உணவுகளைச் சாப்பிடும்போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை. 
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: இதயத்தில் 100% அடைப்பு.. குணப்படுத்த வாய்ப்பு உள்ளதா?

Doctor Vikatan: என்உறவினருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில்ஆஞ்சியோகிராம் செய்தார்கள். அதில் அவருக்கு 100 சதவிகித அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பைபாஸ் அறுவை ச... மேலும் பார்க்க

US attacks on iran: ``போர் அபாயம், பேரழிவு தரும்.." - ட்ரம்பை கண்டித்த அமெரிக்க தலைவர்கள்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா க... மேலும் பார்க்க

போரில் களமிறங்கிய அமெரிக்கா: ``ஈரானின் 3 அணு ஆயுத தளங்களை தாக்கிவிட்டோம்..'' - ட்ரம்ப் சொல்வதென்ன?

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், ``ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்க... மேலும் பார்க்க

``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு மாதிரி அரங்கை பார்வையிட்டு தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு காரணம் என்ன?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ... மேலும் பார்க்க